அறிவிப்பு

ஒலிநூல்

பார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக  வெளிவரவுள்ளது. இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது.  அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்

நன்றி

கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொண்டேன். திரளாக வந்து வாழ்த்திய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எனது எளிய அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 201ல் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு உள்ளன

நம்பி கிருஷ்ணன்

சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம். தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும்.  அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது. நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால்  சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF …

நம்பி கிருஷ்ணன் Read More »

புதிய பதிப்புகள்

தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 210 மலைகள் சப்தமிடுவதில்லை புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 250 காற்றில் யாரோ நடக்கிறார்கள் புதிய …

புதிய பதிப்புகள் Read More »

விருது வழங்கும் விழா

கோவை புத்தகத் திருவிழா  சார்பில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 20  வெள்ளி மாலை ஆறு மணிக்கு கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது. வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 201. வெள்ளி மாலையில் அங்கே இருப்பேன். விருப்பமானவர்கள் சந்திக்கலாம். ஞாயிறு மாலையும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருப்பேன். ஞாயிறு மாலை (22.07.2018)  கொடீசியா புத்தக கண்காட்சி …

விருது வழங்கும் விழா Read More »

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு

செகாவின் மீது பனிபெய்கிறது கட்டுரை தொகுப்பின்  புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும்காதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் செகாவ். டால்ஸ்டாய், கோகல், புஷ்கின், கார்க்கி போன்றோர்களின் ஆளுமையை அடையாளம் காட்டுகின்றன. சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. விலை ரூ 150 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. …

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு Read More »

நெடுங்குருதி புதிய பதிப்பு

நெடுங்குருதி நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல்  ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. விலை ரூ 500 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:Desanthiripathippagam@gmail.com

யாமம் புதிய பதிப்பு

யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவருகிறது. நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன. விலை ரூ 400 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. •• தேசாந்திரி பதிப்பகம் டி1, …

யாமம் புதிய பதிப்பு Read More »

துயில் புதிய பதிப்பு

துயில் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன. தமிழ் புனைகதை பரப்பில்  தனித்துவமிக்க நாவலாகக் கொண்டாடப்படுகிறது. விலை ரூ 525 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 …

துயில் புதிய பதிப்பு Read More »

மறுபதிப்புகள்

விகடன் பிரசுரம் வெளியிட்டு வந்த எனது நூல்களான துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, சிறிது வெளிச்சம். இந்திய வானம்,  கேள்விக்குறி ஆகிய நூல்களுக்கான பதிப்புரிமை முடிந்துவிட்ட நிலையில் அவற்றை தேசாந்திரி பதிப்பகம் புதிய வெளியீடுகளாக கொண்டுவரவுள்ளது. இந்த நூல்களின் கிண்டில் ஈபுக்கையும் தேசாந்திரியே வெளியிடவுள்ளது. மறுபதிப்பு செய்யப்படும்  பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில் இவை வெளியாகும்.