அறிவிப்பு

எனது புத்தகங்கள்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த எனது புதிய நாவல் நிமித்தம் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து அதன் அடுத்தபதிப்பு வெளிவர இருக்கிறது இது போலவே இலக்கில்லாத பயணி , எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, காந்தியோடு பேசுவேன் ஆகிய நூல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளன. நான் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள நூறு சிறந்த தமிழ்சிறுகதைகளின் தொகைநூல் மிகச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது, எனது புத்தகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் …

எனது புத்தகங்கள் Read More »

தெலுங்கு இணைய இதழில்

பிழை திருத்துபவரின் மனைவி என்ற எனது சிறுகதை தெலுங்கு இணைய  இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கதையை மொழியாக்கம் செய்திருப்பவர்  Avineni Bhaskar. https://patrika.kinige.com/?p=1836

இலக்கிய முகாம்

இலக்கிய வாசிப்பினை பரவலாக்கவும், உலக அளவிலான இலக்கியப்போக்குகள் , தமிழின் இன்றைய எழுத்துலகம் மற்றும் புதிய படைப்பாளிகள் குறித்து கவனம் கொள்ளவும் இந்த ஆண்டு ஐந்து இலக்கிய முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறேன் . இதன் முதல்முகாம் கதைகள் பேசுவோம், சென்னையில் நடைபெறுகிறது, இது சிறுகதைகளுக்கானது, மார்ச் 23 ஞாயிறு அன்று நடைபெறுகிறது, அடுத்த முகாம் மே மாதம் மதுரையில் நடைபெற்ற உள்ளது ,அது நாவலுக்கான முகாம், மூன்றாவது முகாம் ஆகஸ்ட் மாதம் கவிதைகள் குறித்து ஏலகிரியில் நடைபெற …

இலக்கிய முகாம் Read More »

சொல்வனம் சிறப்பிதழ்

சொல்வனம் இணையத்தில் வெளிவரும் தரமான இணையஇதழ், தேர்ந்த இலக்கியப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், கலை மற்றும் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது, நான் தொடர்ந்து சொல்வனம் இதழை வாசித்து வருகிறேன், தற்போது சொல்வனம் தனது நூறாவது இதழாக அசோகமித்திரன் சிறப்பிதழை பதிவேற்றம் செய்துள்ளது, நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மை சாதனையாளரான அசோகமித்திரனின் படைப்புகளைக் கொண்டாடும் இந்த முயற்சி மிகவும் முக்கியமான இலக்கியப் பங்களிப்பாகும், இந்த இதழில் அசோகமித்திரனின் நேர்காணல், கட்டுரைகள். அவரது படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள், …

சொல்வனம் சிறப்பிதழ் Read More »

கதைகள் பேசுவோம்

புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன ஆனால் தீவிரமாகப் படிப்பவர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள், ஒத்த ரசனையுடையவர்கள், இலக்கியத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளவிரும்புகிறவர்கள், படைப்பிலக்கியத்தில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்கள் இவர்கள் ஒன்றிணைந்து உரையாடவும் விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொதுவெளி இல்லாமல் இருக்கிறது என நண்பர்கள் பலரும் என்னிடம் ஆதங்கப்படுகிறார்கள், நான் எழுத துவங்கிய காலத்தில் இது போன்ற சந்திப்புகள், இலக்கியக்கூட்டங்கள் நிறைய நடைபெற்றன, முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள், குற்றாலம் கவிதைப்பட்டறை இதன் சிறந்த எடுத்துக்காட்டு இலக்கியப்பகிர்விற்கான பொதுவெளியை உருவாக்கும் …

கதைகள் பேசுவோம் Read More »

ஈரோட்டில்

கல்லூரி நிகழ்வு ஒன்றிற்காக ஈரோடு வருகை தர இருக்கிறேன், 18 மற்றும் 19ம் தேதிகளில் ஈரோட்டில் இருப்பேன், சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் தொடர்பு கொள்வதற்கு கிருஷ்ணன் : 9865916970

திருச்சியில்

திருச்சியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்லி பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் நாளை மாலை (13.02.14) ஆறுமணிக்கு நான் உரையாற்றுகிறேன் மாலை 5மணி முதல் உயிர்மை புத்தகக் கடையில் இருப்பேன்,  (உயிர்மை ஸ்டால் எண் 53.) சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் ***

ஜப்பான் பயணம்

ஜனவரி முப்பது முதல் பிப்ரவரி ஏழு வரை ஜப்பான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன், இதில் டோக்கியோவில் நடைபெற உள்ள இலக்கியவிழாவில் கலந்து கொள்கிறேன். ஜப்பானில் வசிக்கின்ற தமிழர்கள் நடத்தும்  பொங்கல் கொண்டாட்ட நிகழ்விது, இதனை முழுமதி கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்கிறது. **

அ. முத்துலிங்கம்

கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ்  என்ற இலக்கிய நிகழ்விற்காகக் கனடாவில் இருந்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆற்றியுள்ள உரையின் காணொளியை இணையத்தில் பார்வையிட்டேன் , இந்தக் காணொளியில் முத்துலிங்கம் மிகவும் அற்புதமாகப் பேசியிருக்கிறார். அவர் சொல்லும் தமிழ் அகதியின் கதையும் , ஆறுமணி சிட்டுக்குருவியும் மனதைத் தொடுகிறது. https://youtu.be/O3_ZJ6U9zNw KOVAIMUTTUSPEECH

சாரல் விருது

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 2014 ஆம் ஆண்டின் சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த எழுத்தாளர்களைத் தேடிக் கௌரவிக்கும் ஜேடி ஜெர்ரி இருவரும் பாராட்டிற்குரியவர்கள் கவிஞர் விக்கிரமாதித்யன்  பதினாறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். அண்ணாச்சிக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ••