அறிவிப்பு

சென்னை புத்தக சங்கமம்

சென்னை ராயப்பேட்டை YMCA வில்  நடைபெற்று வரும் சென்னை புத்தக சங்கமத்தில் நிறைய ஆங்கில நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக நவீன இலக்கியம் சார்ந்து வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உம்பர்தோ ஈகோ, நார்டின் கோடிமர், மார்க்ரெட் ஆட்வுட், டால்ஸ்டாய், டோனி மாரிசன், ஐசக் பேபல், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், மிலன்குந்தேரா, மெல்வில், டொனால்ட் பார்த்தல்மே உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள்  மலிவு விலையில் கிடைக்கின்றன அத்துடன் ஒவியம், இசை, வரலாறு. அகராதிகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் …

சென்னை புத்தக சங்கமம் Read More »

சிறுமியின் பாராட்டு

குழந்தைகளுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நூலை ஜி.கீதா ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் Whirling Swirling Sky என்ற இந்த நூல்  நண்பர் பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளளது, இரண்டு வாரங்களின் முன்பாக இந்த நூலைப் படித்த ஒன்பது வயது சிறுமி சாதனா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாள். வழக்கமான எத்தனையோ மின்னஞ்சல்களுக்கு நடுவில் அவளது மெயில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்தது, எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக இதைக் …

சிறுமியின் பாராட்டு Read More »

அஞ்சலி :மார்க்வெஸ்

லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  இன்று காலமானார், மார்க்வெஸ் எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர், அவரது கதைகளை எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன் எண்பதுகளின் துவக்கத்தில் மார்க்வெஸின் புத்தகங்கள் கிடைக்காமல் அதை வாங்குவதற்காகவே சென்னை, திருவனந்தபுரம், மும்பை, எனச் சுற்றியலைந்திருக்கிறேன் கோணங்கி மார்க்வெஸின் படைப்புகளுக்காக கல்குதிரையில் சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்திருக்கிறார், அந்தப் பணியில் அவர் கூடவே அலைந்த போது பகலும் இரவுமாக மார்க்வெஸ் பற்றிப் பேசியிருக்கிறோம், The Fragrance of …

அஞ்சலி :மார்க்வெஸ் Read More »

பிறந்த நாள்

நாளை எனது பிறந்தநாளை முன்னிட்டு (13.04.2014) டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். மாலை நான்கு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம் தொடர்புக்கு : வேடியப்பன் 9940446650 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078. (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம்:  மாலை 4 மணி ••••

திருவண்ணாமலை

இன்று திருவண்ணாமலை செல்கிறேன் பவா மற்றும் நண்பர்களைச் சந்திப்பதுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாளையும் திருவண்ணாமலையில் இருப்பேன் ••

அஞ்சலி: தி.க.சி

தமிழ் இலக்கிய உலகின் மூத்த விமர்சகரும், சிறந்த பண்பாளருமான தி.க.சி காலமடைந்த செய்தி கேட்டு தாளமுடியாத துயரமடைந்தேன் இலக்கியத்திற்காகவே வாழ்ந்த அபூர்வமான மனிதர் தி.க.சி,  புதிய எழுத்தாளர்களை அவர் போல வழிநடத்தக்கூடியவர் எவருமில்லை,  அவரது பாராட்டுக் கடிதம் பெறாத எழுத்தாளர்கள் எவருமில்லை, பேரன்பு கொண்ட மனிதர். தி.க.சி ஒரு தனிநபரில்லை அவர் ஒரு இலக்கிய இயக்கம், அவர் உருவாக்கிய எழுத்தாளர்கள், தீவிர வாசகர்கள், ஊடக செய்தியாளர்கள் என நிறைய இருக்கிறார்கள், எனது முதல் கதை வெளியான போது …

அஞ்சலி: தி.க.சி Read More »

முகாம் வருவதற்கான வழி

ஞாயிறு (23.03.2014) அன்று காலை 9.30 மணிக்குக் கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் துவங்க இருக்கிறது இதற்காகத் தண்டரை வரை பயணம் செய்வதற்கான வாகனவசதி டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பைக் அல்லது காரில் வர விரும்புகிறவர்கள் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பிரதான சாலையில் வந்து செங்கல்பட்டு பாலத்தின் கீழ் உள்ள பாதை வழியாக ஊருக்குள் நுழைந்து திருக்கழுகுன்றம் சாலையில் பயணிக்க வேண்டும், செங்கல்பட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தண்டரை உள்ளது, …

முகாம் வருவதற்கான வழி Read More »

முகாம் குறிப்புகள் 2

கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் கலந்து கொள்பவர்களுக்காக  டிஸ்கவரி புக்பேலஸ் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. நான் தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் ரூ 650க்கு பதிலாக ரூ 550க்கு விற்பனை செய்யப்படும், 1100 பக்கங்கள் உள்ள இந்த தொகைநூல் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கியது, புதிதாக எழுத விரும்புகிறவர்கள், இலக்கிய ரசனையை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது. இம்முகாமில் எனது ஏழு இலக்கியப் பேருரைகளின் டிவிடி, மற்றும் அனைத்துப் புத்தகங்களும் சிறப்புவிலையில் விற்பனைக்குக் …

முகாம் குறிப்புகள் 2 Read More »

முகாம் குறிப்புகள்- 1

வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன். இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன காஞ்சனை – புதுமைப்பித்தன் துக்க விசாரணை-ஜி. நாகராஜன் பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன் காசி-பாதசாரி மூங்கில் குருத்து – திலீப்குமார் வாசிக்க : https://azhiyasudargal.blogspot.in/ *** உலகச்சிறுகதைகள் பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார் …

முகாம் குறிப்புகள்- 1 Read More »

உரை

வருகிற சனிக்கிழமை (15.03.2014 ) மாலை ஆறுமணிக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் ஹிரோஷிமாவிற்குச் சென்று வந்த எனது அனுபவங்கள் குறித்துப் பேச இருக்கிறேன். இந்த நிகழ்வில் சமீபமாக புகுஷிமாவிற்குச் சென்று வந்த கோ.சுந்தர்ராஜன் அணுஉலை அபாயங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார் இடம் : கவிக்கோ அரங்கம் ரஹமத் வளாகம், சிஐடி காலனி 2வது மெயின்ரோடு, மயிலாப்பூர் சென்னை- 4