வாசிப்பெனும் கலை
சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அதன் முக்கிய நோக்கம் வகுப்பறையில் கவிதை கவிதை நாடகம் போன்றவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து உரையாடுவதாகும். பாடமாக வைக்கப்பட்ட சிறுகதையோ, கவிதையோ, நாவலோ மாணவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே படிப்பதால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மீதே அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் வந்துவிடுகிறது. நான் படிக்கும் நாட்களில் துணைப்பாடமாக இருந்த சிறுகதைகளை வகுப்பில் நடத்தவே மாட்டார்கள். பரிச்சைக்கு முன்பாகப் …









