இலக்கியம்

அண்டரெண்டப் பட்சி.

நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார். தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது. இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல். பெருமரங்களின் …

அண்டரெண்டப் பட்சி. Read More »

ஒரு தேவதைக் கதை

சத்யஜித்ரேயின் சாருலதா படத்தில் நடித்த மாதவி முகர்ஜி பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள இந்தப் பதிவு மிக முக்கியமானது. அவரது இணையதளத்திலிருந்து இதைப் பகிர்ந்து கொடுக்கிறேன் •• ஒரு தேவதைக் கதை கவிஞர் சுகுமாரன். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் சத்யஜித் ராய். மற்றவர் மாதவி முகர்ஜி. கோவையில் …

ஒரு தேவதைக் கதை Read More »

சிங்கப்பூர் கனவு.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் பயணநூல் Singapore Dream and Other Adventures: சின்னஞ்சிறிய நூல். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு ஹெஸ்ஸே மேற்கொண்ட மூன்று மாத காலப்பயண அனுபவத்தை 21 கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் மூன்று நான்கு பக்கங்களே ஆகும். 1911ல் இந்தப் பயணத்தை ஹெஸ்ஸே மேற்கொண்டிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்தவர். கேரளாவில் பணியாற்றிய கிறிஸ்துவ மிஷனரியில் இருந்தவர். அவருக்கு ஒன்பது இந்திய மொழிகள் தெரியும். அவரே …

சிங்கப்பூர் கனவு. Read More »

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ …

நெரூதா Read More »

கவிதையெனும் மாற்றுவழி.

செஸ்லாவ் மிலாஸ் (Czeslaw Milosz) தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பான A Book of luminous Things மிகச்சிறந்த புத்தகம். சர்வதேசக் கவிதைகளில் மிகச்சிறப்பானவற்றை தேர்வு செய்து தொகுத்திருக்கிறார். மிலாஸ் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் நிகரற்ற கவியாக கருதப்படுகிறவர் அவரது கவிதைத் தேர்வும் அதை வகைப்படுத்திய முறையும் இடம்பெற்றுள்ள கவிதைகளும் தனித்துவமானவை. இதுவரை தொகுக்கப்பட்டுள்ள சர்வதேச கவிதைத் தொகுப்புகளில் இது தனித்துக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.. பொதுவாக சர்வதேசக் கவிதைகளின் தொகுப்புகளைத் …

கவிதையெனும் மாற்றுவழி. Read More »

புத்தகங்களே உலகம்

ஆங்கில எழுத்தாளர் ஜுலியன் பார்ன்ஸ்  A Life with Books என்ற தனது கட்டுரை ஒன்றில் முதன்முதலாகத் தான் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற அனுபவத்தை  எழுதியிருக்கிறார். பார்ன்ஸின் தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள். ஆகவே அவர்கள் வாங்கிச் சேகரித்த புத்தகங்கள் அவரது வீட்டிலே சிறிய நூலகமாக இருந்தது. அம்மா வழி தாத்தா பாட்டியும் ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் நிறைய இருந்தன. தொலைக்காட்சி அறிமுகம் ஆகாத காலம் என்பதால் படிப்பதற்கு நிறைய நேரம் …

புத்தகங்களே உலகம் Read More »

நேர்காணல்.

மின்னம்பலம் இணைய இதழில் வெளியான நேர்காணல். •• மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை …

நேர்காணல். Read More »

இடக்கை -ஒரு பார்வை

இடக்கை இருண்டகாலத்தின்  கதை.அதிகாரத்தின் இறைமைக்கும் பேராசைக்கும் தீனியாக்கப்படும்  சாமானியர்களின்  வாழ்க்கையை  சொல்லும் குரூர வரலாற்றின்  கதை.கிட்டத்தட்ட அரசியல் சூதும் -வஞ்சகங்களும்-படுகொலைகளும்- அழித்தொழிப்புக்களும்  நிரம்பிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தினை அதனுடைய தன்மைகெடாமல் வெளிப்படுத்திய நடப்புயுகத்தின் புனைவுப்பிரதியாக இடக்கை நாவலைக் கருதுகிறேன். இந்த நாவல் நெடுக பேரரசுகள் வீழ்ச்சியுறும் ஒலிகள் கேட்டபடியிருக்க,அந்தப் பேரரசுகளால் கொல்லப்பட்ட,நீதிமறுக்கப்பட்ட குரல்கள்  தம்மை அடையாள அழிப்புச்செய்து மவுனித்துக் கொண்டேயிருக்கின்றன.நாவலில் வருகிற தூமகேது,அஜ்ஜா பேகம் ஆகிய இவ்விரு கதாபாத்திரங்களின் மூலமாக நிகழ்த்தப்படும் – விவாதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் வரலாற்றை …

இடக்கை -ஒரு பார்வை Read More »

உறுபசி

அ.திருவாசகம், எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” நாவல் வாசித்தேன். எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் நாவலை பதிவு செய்திருக்கிறார். கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த சம்பத் என்ற நண்பனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாக இருக்கிறான். அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்ட சம்பத்தின் சட்டையில் ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய் கொண்டிருந்ததையும், அதனை இனி தட்டி விடத் தேவையில்லை என அவன் மனைவி  எண்ணுவது இரக்கத்தை ஏற்படுத்துகிறது. சம்பத்தின்  மரணம், அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த  அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அழகர் சிகரெட் பற்ற வைத்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை எண்ணி மனிதன் வாழ்வும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறதோ என அவன் மனதில் மெல்லிய பயம் ஏற்படுகிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு சொல்லப்படுகிறது. சம்பத்தின்  மரணத்தின் போது, நீர்மாலை எடுத்து வருவதற்காக தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் எடுக்க  சம்பத்தின் …

உறுபசி Read More »

நெடுங்குருதி – ஒரு பார்வை

– பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது. இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு “வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி” இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , …

நெடுங்குருதி – ஒரு பார்வை Read More »