விழிப்புணர்வின் பாதை.
கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் (Ko Un) எழுதிய நாவல் Little Pilgrim 1991ல் வெளியான இந்த நாவல் சுதானா என்ற சிறுவனின் அகத்தேடலை விவரிக்கிறது. இந்த நாவல் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவைப் போன்றது. ஆனால் சித்தார்த்தா ஒரு இளைஞன். அவனது மெய் தேடல் வணிகம், காமம், ஞானம் என மூன்று நிலைகளில் சஞ்சரித்து முடிவில் ஞானத்தை அடைகிறது. இந்தச் சித்தார்த்தான் ஒரு சிறுவன். ஒருவகையில் புத்தர் தான் அந்தச் சிறுவனோ எனும்படியாகக் கூடத் தோன்றுகிறது. அவதாம்சக …