அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம்
அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி …