மய்யழிக் கரையோரம்.
ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன். மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் …