இலக்கியம்

செகாவ்வும் கார்க்கியும்

நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன். செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் …

செகாவ்வும் கார்க்கியும் Read More »

பறத்தலின் ஆனந்தம்

நேற்று Winged Migration   என்ற ஆவணப்படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா என்ற கலை எத்தனை வலிமையானது. அதன் உதவியால் இயற்கையை எவ்வளவு நுட்பமாகவும் நெருக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்ற சிலிர்ப்பு உண்டானது. சில நாட்களுக்கு முன்பாக Winged Migration ஆவணப்படத்தை பார்த்தேன். 86 நிமிசங்கள் ஒடும் இந்தப் படம் பருவகாலத்தில் இடம் விட்டு இடம் பறக்கும் பறவைகளின் முடிவற்ற பயண வழிகளைப் பற்றியது. உலகின் நிரந்தர யாத்ரீகன் பறவைகளே. படம் துவங்கிய …

பறத்தலின் ஆனந்தம் Read More »

கண்ணகியின் நிழலில்

ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல இயக்குனரான குருதத் சிலப்பதிகாரத்தை படமாக்க விரும்பினார். அந்தக் கதை அவரது சொந்த வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.  கீதா தத் என்ற பாடகியைத் திருமணம் செய்து கொண்ட குருதத் தன் படங்களில் நாயகியாக நடித்த வகிதா ரஹ்மானை காதலித்து கொண்டிருந்தார். இரண்டு பெண்களும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். கீதா வங்களாத்தை சேர்ந்தவர். ராய் சௌத்ரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் பாடி மிகுந்த புகழ் பெற்றவர். …

கண்ணகியின் நிழலில் Read More »

காதில்லாத அரசன்

புதிய குறுங்கதை. கடலும் மலையும் சூழ்ந்த ஒரு நாட்டை காதில்லாத அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரசவம்சத்தில் பிறக்கும் எவருக்கும் காதிருப்பதில்லை. அது அவர்களுக்கு பெரிய குறையாகவும் இல்லை. அரசனுடைய காதுகளை உண்மையான செய்திகள் எந்த காலத்திலும் எட்டியதேயில்லை என்பதால் காதை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்து காதற்று போய்விட்டதாக ஒரு நம்பிக்கையிருந்தது. அதை மெய்பிப்பது போலவே அரசவம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் காதில்லாமலே பிறந்தன. காதில்லாத அரசன் அரண்மனையை விட்டு வெளியே வருவதுமில்லை . யாரையும் …

காதில்லாத அரசன் Read More »

பொய் சொல்லும் பூனை

சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் நான் படிப்பதற்காக ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட் ( Joann Sfar -The Rabbi`s Cat )  என்ற கிராபிக்நாவலை வாங்கிவந்திருந்தார். இதை சில மாதங்களாகவே தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக அவர் வரும்போது நினைவூட்டவே மறக்காமல் வாங்கி வந்திருந்தார். காமிக்ஸ் புத்தகங்களின் மீதான விருப்பம் சிறுவயது முதல் என்னோடு சேர்ந்து வளர்ந்து வரக்கூடியது. இப்போதும் புதிதாக ஏதாவது காமிக்ஸ் கண்ணில் பட்டால் வாங்கி வாசிப்பதுண்டு. காமிக்ஸ் …

பொய் சொல்லும் பூனை Read More »

சினிமாவும் ஜெயகாந்தனும்

பத்து பதினைந்து வருடத்தின் முன்புள்ள பழைய கணையாழி இதழ் ஒன்றில் வெளியான ஜெயகாந்தனின் நேர்காணல் இது. வெளிப்படையான பேச்சும் திறந்த விமர்சனமும் கொண்ட இதை புதிய  வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பதிவு செய்கிறேன். ** கணையாழி: சினிமா துறைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஜெயகாந்தன்: ஆமாம். நானாக வலியவரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம்பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே, நீதான் ஒரு படம் நீ சொல்ற மாதிரி எடுத்துக்காட்டு என்றார்கள். `சரி` என்று இறங்கிவிட்டேன். …

சினிமாவும் ஜெயகாந்தனும் Read More »

இதாலோ செவோ

 பாதசாரியின் காசி குறுநாவலை வாசித்த போது அதில் இதாலோ செவோ (Italo Svevo ) பற்றி முதல்முதலாக அறிந்து கொண்டேன். பாதசாரி சிறந்த நவீன கவிஞர். அவரது காசி குறுநாவல் குறிப்பிடத்தக்கவொன்று. மீனுக்குள் கடல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கோவையில் வசிக்கிறார். அந்த குறுநாவல் வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்றும் அது குறித்து தீவிரஇலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். பாதசாரி இதாலோ செவோவின் Confessions of Zeno  நாவலை வாசித்திருக்கிறார். அந்த நாவலை …

இதாலோ செவோ Read More »

புத்தகம் செல்லும் திசை

சில நாட்களுக்கு முன்பாக பழைய புத்தகக் கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். சென்னை நகரில் உள்ள பெரும்பான்மையான பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். எங்கிருந்து அவர்கள் பழைய புத்தகங்களை வாங்கி வந்தாலும் எனக்கு போன் செய்து சொல்வார்கள். ஆனால் சில மாதங்களாக பழைய புத்தகக் கடை பக்கமே போகவில்லை. திடீரென மாலையில் அந்த யோசனை தோன்றியதும்  புத்தககடைக்காரனை தேடிச் சென்றேன். குப்பை போல குவித்து போடப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு வயதானவர் தமிழ்வாணன் புத்தகமிருக்கிறதா என்று தேடிக் …

புத்தகம் செல்லும் திசை Read More »

நினைவில் வந்த கவிதை.

ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சி.சிவசேகரம். அவரது நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள்,போரின் முகங்கள்,  மிக முக்கியமான கவிதை தொகுப்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த சிவசேகரத்தின் கவிதை இது. இன்றுள்ள சூழலில்  வாசிக்கையில் மனது மிகுந்த துயரமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறது. ** என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர் இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன் இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன் போர்ப் பறைகளை எனச் …

நினைவில் வந்த கவிதை. Read More »

சிங்கிஸ் ஐத்மதேவ்.

        பிரபல ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ்  2008 ஜூன் மாதம் பத்தாம் தேதி இறந்து விட்டார் என்ற தகவல்  மிகத் தாமதமாக  நேற்றிரவு தான் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து தெரிந்து கொள்ள நேர்ந்தது. சமீபத்தில்  இறந்து போன ரஷ்ய எழுத்தாளர் சோல்சனிட்சென் இறப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் சிறுபத்திரிக்கை கவனம் ஐத்மதேவிற்கு கிடைக்கவில்லை. காரணம் சோல்சனிட்சென் சர்ச்சைக்கு உள்ளானர். அமெரிக்க ஊடகங்களுக்கு நன்றாக அறிமுகமானவர்.  ஐத்மதேவ் தீவிரமான படைப்பாளி, கோர்பசேவின் வலதுகரம் …

சிங்கிஸ் ஐத்மதேவ். Read More »