வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்
(சொல்வனம் இணையஇதழ் எழுத்தாளர் அம்பை அவர்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மிகச்சிறப்பான முறையில் அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன், நேர்காணலுடன் இதழ் தயாரிக்கபட்டுள்ளது. அந்த இதழில் வெளியான எனது கட்டுரை.) அம்பையின் கதையொன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களைக் குரூரமாகக் கொல்வதையும், விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்ல வைக்கும் அபத்தத்தையும் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது. அது ஒரு பெண்பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது. பாரதியார் தனது …