யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.
பள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே. ஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் …