ஆயிரம் கொக்குகள்
டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கையிருக்கிறது. …