தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்
தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா கிரிகோரினாவின் நினைவு குறிப்பை அடிப்படையாக கொண்ட சிறிய நாடகமிது. இரண்டு முதன்மை பாத்திரங்களின் சந்திப்பே இந்நாடகம். இரண்டு இடையீட்டு பாத்திரங்கள் ஊடாடுகின்றன. பீட்டர்ஸ்பர்க் நகர தனியறையொன்றில் குழப்பமும், தண்டனை பயமும், கடன் பத்திர நிபந்தனை படி முப்பது நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நாவலின் கெடுவும், என பிரச்சனைகளுக்கிடையே தஸ்தாயெவ்ஸ்கி, தோல்வியுற்ற சூதாடியைப்போல நடுங்கியபடி புகையும் சிகரெட்டுடன் தனிமையில் தன்னுடனே உரையாடிக் கொண்டிருக்கிறார். கதைகள் கற்பனையானவை மட்டும் தானா என்ற கேள்வியுடன் தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை சொல்கிறது …