பழகிய பாரதி
பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர …