ஆளுமை

படிப்பதற்காகவே வாழ்பவர்

ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் …

படிப்பதற்காகவே வாழ்பவர் Read More »

ஜெயகாந்தன் பிறந்தநாள்

இன்று ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள், அவரிடம் ஆசிபெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன், உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவசிகிட்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜெயகாந்தன்  தளர்ச்சியாகவே  காணப்பட்டார் ஜேகேயை காண்பதும், அருகமர்ந்து இருப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது, தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்தையே வியந்து பார்க்க வைத்த ஜேகே இப்போது அமைதியாகிவிட்டார் இந்த அமைதியும் அவருக்கு அழகாகவே இருக்கிறது கவிதா சொக்கலிங்கம், முனைவர் மா. ராஜேந்திரன், டாக்டர் ருத்ரன், ஒவியர் சீனிவாசன், யு.எஸ்.எஸ்.ஆர் நடராசன் என பலரும் ஜேகேயை காண்பதற்காக …

ஜெயகாந்தன் பிறந்தநாள் Read More »

கும்பல்

ஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார், கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். …

கும்பல் Read More »

காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது, இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400. பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது, ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல் இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் …

காந்தி Read More »

செல்லப்பாவின் கேமிரா

எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி …

செல்லப்பாவின் கேமிரா Read More »

நெஞ்சில் இட்ட கோலம்

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை, என்றும் அது கலைவதில்லை, எண்ணங்களும் மறைவதில்லை என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் என் நினைவில் கொப்பளிக்கிறது, பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனைப் பற்றியே கடந்த ஒருவாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், முந்திய நாளின் இரவில் யாத்ரா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்கள் கலங்கிவிட்டது, என்னவொரு அற்புதமான ஒளிப்பதிவு, படமாக்கம், இசை, மலையாளத்தில் வெளியான அப்படம் இன்றளவும் புத்துணர்வுடனே இருக்கிறது. பாலுமகேந்திரா அவர்களுடன் பழகிய நினைவுகள் பொக்கிஷமானவை, இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு …

நெஞ்சில் இட்ட கோலம் Read More »

ஹோமியோபதியின் மகத்துவம்

நேற்று டாக்டர் விகடன் இதழுக்காக நேர்காணல் செய்ய வந்திருந்தார்கள், அப்போது எனது அண்ணன் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதையும் அவரது மருத்துவசெயல்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் சார் இந்த அனுபவங்களைப் பற்றி எழுதவேயில்லை எனப் பத்திரிக்கையாளர் ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கென்ன எழுதிவிடுகிறேன் என்று சொன்னேன் நேற்று இரவு யோசித்த போது தோன்றியது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் எவ்வளவோ பயணங்கள் செய்திருக்கிறேன், கண்டபடி ஊர் சுற்றியிருக்கிறேன், எது எனது பயணத்தின் உறுதுணை என்றால் ஹோமியோபதி …

ஹோமியோபதியின் மகத்துவம் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் என்ன புதிய புத்தகங்கள் வாங்கலாம்  என்றும்  நண்பர்கள்  பலர் தொடர்ந்து  மின்னஞ்சலில் கேட்டு வருகிறார்கள்,அவர்களுக்காக எனது பரிந்துரை, இது கடந்த நான்கு நாட்களில் புத்தக கண்காட்சியில் சுற்றித் தேர்வு செய்தவை,  இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளவும் ••• 1) ஒநாய் குலச்சின்னம்  -ஜியாங் ரோங் -தமிழில் சி மோகன், அதிர்வு வெளியீடு, முக்கியமான மொழியாக்க நாவல் 2) …

புத்தகக் கண்காட்சியில் Read More »

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்

– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை ••• மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக …

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள் Read More »