ஜெயகாந்தன் பிறந்தநாள்

இன்று ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள், அவரிடம் ஆசிபெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன், உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவசிகிட்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜெயகாந்தன்  தளர்ச்சியாகவே  காணப்பட்டார்

ஜேகேயை காண்பதும், அருகமர்ந்து இருப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது,

தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்தையே வியந்து பார்க்க வைத்த ஜேகே இப்போது அமைதியாகிவிட்டார்

இந்த அமைதியும் அவருக்கு அழகாகவே இருக்கிறது

கவிதா சொக்கலிங்கம், முனைவர் மா. ராஜேந்திரன், டாக்டர் ருத்ரன், ஒவியர் சீனிவாசன், யு.எஸ்.எஸ்.ஆர் நடராசன் என பலரும் ஜேகேயை காண்பதற்காக வந்திருந்தார்கள்,

எளிமையான பிறந்தநாள் விழா, குடும்பத்தினர், நண்பர்கள்  ஒன்று கூடிக் கொண்டாடினோம்

•••

0Shares
0