கோணங்கி
எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு குறித்து 1998ல் கோணங்கி எழுதிய விமர்சனம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தேன். இது காலக்குறி இதழில் வெளியானது என நினைக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்னை அடையாளப்படுத்திய சிறுகதை தொகுதி. அதன் புதியபதிப்பு தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. அந்த மகிழ்வில் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் •••• தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு – கோணங்கி எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் …