நூற்றாண்டின் நினைவுகள்
Around India with a Movie Camera என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் பிரிட்டனின் BFI தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள இந்தியா பற்றிய ஆவணப்படங்களிலிருந்து 72 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தத் தொகுப்பினை உருவாக்கியிருக்கிறார் சந்தியா சூரி. 1899ல் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் துவங்கி 1947 வரையிலான பல்வேறு வகைக் காட்சிப்பதிவுகளைத் தேடிச்சேகரித்து ஒன்றிணைத்திருக்கிறார் இந்த ஆவணப்படத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள். அன்றைய மகாராஜாக்கள் மற்றும் வைஸ்ராய்களின் ஆடம்பர வாழ்க்கை. இசை மற்றும் நடனக்கலைஞர்களின் உலகம். புலி …








