ஆல்பெர் காம்யுவின் அம்மா

ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல் அந்நியன். ( Albert Camus’s ‘The Stranger’)  வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவல் 1942-ல் எழுதப்பட்டது. “இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது” என்று ‘மெர்சோ’சொல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் காணச் சென்றிருந்த போது அவர் இந்த நாவல் குறித்து வியந்து பேசிக் கொண்டிருந்தார். மெர்சோவைப் பற்றிய அவரது அவதானிப்பு மறக்கமுடியாதது. …

ஆல்பெர் காம்யுவின் அம்மா Read More »

வான் நோக்கும் கண்கள்

புகைப்படக்கலை அறிமுகமாவதற்கு முன்னால் மன்னர்களும் பிரபுக்களும் ஓவியர்களை வரவழைத்து தனது உருவத்தை வரைந்து கொள்வதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். இதனால் உருவப்படம் வரையும் திறமையான ஓவியர்களுக்குப் பெரிய கிராக்கியிருந்தது. இதில் ஏராளமான பணமும் கிடைத்தது. ஆனால் உருவப்படம் வரைவதில் திறமைசாலிகளாக இருந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள். அதுவும் மூத்த ஓவியர்கள். அவர்களை மீறிப் புதிதாக ஒரு இளம் ஓவியருக்கு வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். அதுவும் ஒரு பெண் ஓவியராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. இந்தத் தடைகளை மீறி ஓவிய …

வான் நோக்கும் கண்கள் Read More »

எழுத்தாளர்களின் உலகம்

 ‘எனதருமை டால்ஸ்டாய்’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் சுதானந்தா அவர்களும் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களும் வகுப்பறையில் ‘நாவல் இலக்கியம்’ பாடத்தை நடத்தினார்கள். அவர்கள் பிற ஆசிரியர்களைப் போலக் ‘கதைச்சுருக்கம்’ கூறுபவர்கள் அல்லர்; தம்மோடு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, அந்த நாவலின் வழியாக அந்தப் படைபாளரின் படைப்பு மனத்தைப் பின்தொடர்பவர்கள். நாவலையும் சிறுகதையையும் பல கோணத்தில் புரிந்துகொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொடுத்தவர்கள்.  கி. ராஜநாராயணனையும் தி. ஜானகிராமனையும் …

எழுத்தாளர்களின் உலகம் Read More »

அம்மாவின் சுதந்திரம்

வாழ்வின் தேவை -சிறுகதை குறித்து தயாஜி. மலேசியா •• அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வின் தேவை’. அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச …

அம்மாவின் சுதந்திரம் Read More »

காதலின் மஞ்சள் மலர்

உலகின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது Sunflower (Italian: I girasoli). விட்டோரியா டிசிகா இயக்கியுள்ள இந்தப்படம் வழக்கமான காதல்கதை போலக் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. மாறாகக் காதலின் புதிய பரிமாணத்தை அடையாளம் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது கதை நடக்கிறது போர் முடிந்த போதும் வீடு திரும்பாத ராணுவ வீரர்களின் நிலையைப் பற்ற அறிந்து கொள்ள இத்தாலியிலுள்ள அரசாங்க தகவல் மையத்தில் பலரும் காத்து கிடக்கிறார்கள். அங்கே தன் கணவன் என்ன ஆனான் …

காதலின் மஞ்சள் மலர் Read More »

கனவினை வடிவமைப்பவர்கள்

“Devrim Arabaları” (Cars of the Revolution) என்ற துருக்கிப்படத்தினைப் பார்த்தேன் துருக்கியில் 1960 ல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே. பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டுமே தேசம் சுதந்திரமாக இருக்க முடியும் என்று புதிய அதிபர் ஜெனரல் செமல் நம்புகிறார். இதற்காக நாட்டில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறார். ஆனால் பொருளாதார வளமில்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்கிறார்கள். துருக்கியால் சிறிய குண்டூசியைக் கூடத் தயாரிக்க முடியாது. …

கனவினை வடிவமைப்பவர்கள் Read More »

கடைசிப் போராட்டம்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்த இந்தியாவைச் சித்தரிக்கும் ஆங்கிலப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பெரும்பான்மை அமெரிக்கப்படங்கள். அவர்களின் வணிக லாபங்களுக்காக இந்தக் கதைக்களனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் பெருமை பாடுவதே இந்தப் படங்களின் தலையான நோக்கம். இப்படங்கள் இந்தியர்களை முட்டாள்கள். போக்கிரிகள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளாகவே சித்தரிக்கின்றன. போவானி ஜங்ஷன் என்பது கற்பனையான ஒரு ரயில் நிலையம். ஜான்சி ரயில் நிலையத்தின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். Bhowani Junction ஜான் மாஸ்டர்ஸ் எழுதிய நாவல். இதை மையமாகக் …

கடைசிப் போராட்டம் Read More »

வாழ்வின் தேவை

சிறுகதை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள். இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள். அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து …

வாழ்வின் தேவை Read More »

உடலின் அலைகள்

. பினா பாஷ்( Pina Bausch. )உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞர். இவரது Orpheus and Eurydice – Dance opera என்ற நடனநிகழ்வினைப் பற்றிய படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. 1994ல் பினா பாஷ் சென்னையில் நடனநிகழ்ச்சி நடத்திய போது நேரில் கண்டிருக்கிறேன். மேடையமைப்பும் ஒளியும் நடனமிடும் கலைஞர்களின் உடல்திறனும் வியப்பில் ஆழ்த்தியது. நடனக்கலைஞர் சந்திரலேகாவின் புதுவகை நடனங்களைக் கண்டு ரசித்திருந்த எனக்குப் பினா ஒப்பற்ற சாதனையாளராகத் தோன்றினார். அவர் சந்திரலேகாவின் நண்பர். இருவரும் இணைந்து …

உடலின் அலைகள் Read More »

கைதட்டுகள் போதும்

சிறுகதை அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார். கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை. ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார். விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் …

கைதட்டுகள் போதும் Read More »