இயற்கையின் வண்ணங்கள்

Life in Colour என்ற டேவிட் அட்டன்பரோவின் புதிய ஆவணத்தொடரைப் பார்த்தேன். இயற்கையின் வண்ணங்களை ஆராயும் இந்தத் தொடர் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குக் கொடையாக வழங்கியுள்ள வண்ணங்களையும் அதன் தனித்துவத்தையும் மிக அழகாக விவரிக்கிறார் அட்டன்பரோ. அவர் அளவிற்கு உலகெங்கும் சுற்றி இயற்கை வளங்களை, உயிரினங்களை, கடலை, கானகங்களைக் கண்டவரில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் அவர் இயற்கையின் வண்ணங்களைப் படமாக்கியுள்ள விதம் அபாரம். குறிப்பாக ஒரு நண்டின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைக் …

இயற்கையின் வண்ணங்கள் Read More »

இலக்கற்ற பயணம்

 ‘தேசாந்திரி’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை வீட்டின் சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாக நிலாவைப் பார்ப்பதற்கும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அல்லது வீட்டின் தோட்டத்தில், முற்றத்தில் நின்று நிலாவைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாளரங்கள் நம் பார்வைக் கோணத்தைக் கட்டுப்படுத்தும்; நமது சுதந்திரத்தைத் தடுக்கும். ஆனால், மொட்டை மாடியும் தோட்டமும் முற்றமும் நமக்கு அனைத்துச் சுதந்திரத்தையும் கொடுக்கும்; எல்லாக் கோணத்திலும் நிலாவைப் பார்க்க நம்மை அனுமதிக்கும். பயணங்கள் சுதந்திரமானவை. அவை தரும் காட்சிப் பதிவுகள் …

இலக்கற்ற பயணம் Read More »

சத்யஜித்ரேயின் நூற்றாண்டு

இயக்குநர் சத்யஜித்ரேயின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது. அவரது திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். பதேர் பாஞ்சாலி எனக்கு மிக விருப்பமான படம். அந்தப் படம் குறித்து விரிவான புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை வாசித்துப் பாராட்டிய பாலுமகேந்திரா அது போல ஒரு திரைப்படத்திற்கு விரிவான நூல் வெளியானதில்லை என்று பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். பதேர் பாஞ்சாலியை தற்போது வண்ணமயமாக்கி வருகிறார்கள். அதன் சில காட்சிகளை முன்னோட்டமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. குறிப்பாக அபுவும் துர்காவும் ரயிலைக் …

சத்யஜித்ரேயின் நூற்றாண்டு Read More »

திருமண நாடகம்

Marriage Italian Style 1964ம் ஆண்டு வெளியான இத்தாலியத் திரைப்படமாகும் விட்டோரியோ டி சிகா இயக்கிய இப்படத்தில் சோபியா லோரன் மற்றும், மார்செல்லோ மாஸ்ட்ரோயானி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிசிகாவின் புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் படம் பெற்ற கவனத்தையும் புகழையும் அவரது பிறபடங்கள் பெறவில்லை. ஆனால் டிசிகாவை ஒரு மாஸ்டராகக் கொண்டாடச் செய்யும் பல படங்கள் இருக்கின்றன. அதில் Marriage Italian Style முக்கியமானது. படத்தின் துவக்காட்சியில் பேக்கரியில் தடுமாறி விழுந்துவிட்ட பிலுமேனாவை ஒரு காரில் கொண்டு …

திருமண நாடகம் Read More »

காலம் சொல்லும் பெயர்கள்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது. காலம் சொல்லும் பெயர்கள்

புனைவெழுத்தின் வரைபடம்.

‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’. ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு …

புனைவெழுத்தின் வரைபடம். Read More »

முதல் இந்தியச் சிற்பம்

இந்தியாவின் மிகப்பெரிய பதிப்பாளர் சாகித்ய அகாதமி. 24 மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாதமி மட்டுமே. அரசு நிதி உதவியுடன் செயல்படும் இந்தப் பதிப்பகம் மலிவு விலையில் மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டுவருகிறது சாகித்ய அகாதமி வெளியிடும் புத்தகங்களின் உள் அட்டையில் ஒரு சிற்பத்தின் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி நூலைக் கையில் எடுக்கும் போதும் இந்தச் சிற்பத்தை ரசித்துப் …

முதல் இந்தியச் சிற்பம் Read More »

ஒரு கொசுவின் கதை

பெர்னாண்டோ ஸோரன்டினோ ஸ்பானிய எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மாயமும் விசித்திரமான நிகழ்வுகளும் கொண்டவை. அன்றாட வாழ்க்கையினை இத்தனை நுட்பமாக, குறிப்பாக அதன் அபத்த நிகழ்வுகளை துல்லியமாக யாரும் எழுதியதில்லை. அவர் கொசுவைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கொசுவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று தான் எவருக்கும் தோன்றும். வேறு எவராது இந்தக் கதையை எழுதியிருந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத இயலாது. ஆனால் ஸோரன்டினோ எத்தனை அழகாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை விவரிப்பவர் …

ஒரு கொசுவின் கதை Read More »

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார். அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! …

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம் Read More »

ஷேக்ஸ்பியர் சினிமா

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை தழுவி உருவாக்கபட்டுள்ளது. இதில் பகத் பாசில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மேக்பெத்தை விடவும் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய இரகள் படத்தினை தான் இப்படம் அதிகம் தழுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து திரைப்படங்கள் உலகின் வேறுவேறு மொழிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கபடுகின்றன. உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கட்டுள்ளது ஷேக்ஸ்பியருக்கு மட்டுமே. பைபிளுக்கு அடுத்து இதுவே அதிகமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாகக் கொண்டு 410 …

ஷேக்ஸ்பியர் சினிமா Read More »