புகைப்படம் சொல்லாதது

கன்னட எழுத்தாளர் எஸ். திவாகர் புகைப்படம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். மிகச்சிறிய கதை. ஒரு பழைய காலப் புகைப்படத்தைப் பற்றியது. பாணன் என்ற நண்பர் இந்தக் கதையினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியிருந்தார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. கல்யாணப் பெண்ணிற்கு நிகராக அவளது கணவன் அணிந்துள்ள நகைகள் மற்றும் சட்டை அணியாத அவரது தோற்றம் மாப்பிள்ளை முகபாவத்தில் கல்யாணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. எதையோ மறைக்கும் கண்கள். …

புகைப்படம் சொல்லாதது Read More »

நோய்மையிலிருந்து விடுதலை

துயில் – ஒரு வாசிப்பனுபவம் பாஸ்கர் தேவதாஸ் நோய்மைப் பற்றியும் அதன் ரகசியங்களையும் துயில் நாவல் மூலம் எஸ்ரா அவர்கள் மிக உன்னத படைப்பாக இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார். ஒரு எளிய இலக்கியவாசகனாக இந்த நாவல் எனக்குள் உருவாக்கிய பாதிப்புகளை பதிந்திருக்கிறேன் மூன்று வழியாக தெக்கோடு என்ற கிராமத்து பயணமே இந்த நாவல், இது ஒரு TRIOLOGY SUBJECT போல் உள்ளது, KOKHER என்ற கிராமத்தை மையமாக வைத்து Abbas Kiarostami. மூன்று படங்களை  இயக்கியிருப்பார். அது …

நோய்மையிலிருந்து விடுதலை Read More »

தவற விட்ட மீச்சிறு தருணம்

துணையெழுத்து குறித்த வாசிப்பனுபவம் கோபி சரபோஜி ———————————————– எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் …

தவற விட்ட மீச்சிறு தருணம் Read More »

மறைக்கப்பட்ட இந்தியா

‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது. இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது. நெடுநாள் திறக்கப்படாத …

மறைக்கப்பட்ட இந்தியா Read More »

கவிதையும் கவிஞனும்

மணல் கடிகை என்ற தனது வலைப்பக்கத்தில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் ரமாகாந்த் ரத்தின் கவிதை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்திருந்தார். மிக நல்ல கட்டுரையது. “ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக …

கவிதையும் கவிஞனும் Read More »

காலத்தின் அடையாளம்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ராயப்பேட்டையின் நினைவுகள் குறித்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை புதிய பகுதி ஒளிபரப்பாகும்.

ஒளியிலே தெரிவது

புகழ்பெற்ற சீன இயக்குநர் ஷாங் யிமூவின் புதிய திரைப்படம் One Second. 2019 ஆண்டுப் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட படம் உடனடியாகச் சீன அரசால் திரும்ப பெறப்பட்டது. அத்தோடு சீனாவில் இப்படம் வெளியாகவுமில்லை. அரசின் தணிக்கை காரணமாகத் தடைவிதிக்கப்பட்டதே காரணம் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு One Second சென்ற ஆண்டு வெளியானது. இவ்வளவிற்கும் அந்தப் படம் சீன அரசியலைப் பேசும்படமில்லை. கலாச்சாரப் புரட்சி காலத்தில் ஒரு பாலைவன கிராமத்தில் சினிமா திரையிடும் …

ஒளியிலே தெரிவது Read More »

உலகின் முதற்புத்தகம்

நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையாளர்கள், ஆசிரியர்கள். நூலகர் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த உலகப் புத்தகத் தின வாழ்த்துகள். படிப்பதற்காகவே வாழுகிறவர்கள் என்று சிலரை நினைத்துக் கொள்வேன். அதில் முக்கியமானவர்கள் வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன். இருவரும் ஆண்டு முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புதிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். புத்தகங்களுடனே வாழுகிறார்கள். வேலூர் லிங்கம் ஒரு புத்தகக் கண்காட்சி தவறாமல் சென்றுவிடுவார். ஆன்லைன் மூலமாகவும் தமிழ் …

உலகின் முதற்புத்தகம் Read More »

‘இந்திய வானம்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்கள் வகுப்பறையில் நவீன இலக்கியங்கள் தொடர்பான பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, “எல்லாத்துக்கும் உதாரணம் இந்தியாவுல இருக்கும்” என்றார். அப்போது அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரியவில்லை. ஆனால், எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இந்திய வானம்’ புத்தகத்தைப் படித்ததும் அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரிந்துவிட்டது. ‘மேன்மைகளும் கீழ்மைகளும் சம அளவில் நிறைந்த பெருநிலம்தான் …

‘இந்திய வானம்’ – வாசிப்பனுபவம் Read More »

காதலின் ஒளியில்

நோபல் பரிசு பெற்ற கவிஞரான ஆக்டோவியா பாஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். The Labyrinth of Octavio Paz”என்ற இந்த ஆவணப்படத்தில் அவரது ஆளுமையின் பன்மைத்தன்மை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ் இந்தியாவில் மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றியவர். டெல்லியில் வசித்த நாட்களில் பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய அரசியல் ஆலோசகரின் மனைவியான மேரி ஜோஸ் உடன் நெருக்கமான காதல் உருவானது. அந்த ரகசியக்காதல் தான் இந்தியாவை அவர் நேசிக்க ஒரு காரணம் என்கிறார்கள். பாஸ் ஏற்கனவே …

காதலின் ஒளியில் Read More »