வாழ்த்துகள் சீனிவாசன்

பிரண்டலைன் இதழ் சென்னை375 யைக் கொண்டாட சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சென்னை நகரின் வரலாற்றை அழகான கறுப்பு வெள்ளை புகைப்படங்களுடன், அறியப்படாத தகவல்களுடன் அற்புதமாகத் தயாரித்திருக்கிறார்கள். அசோகமித்ரன், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா. டி.எஸ்.சுப்ரமணியன், வி.ஸ்ரீராம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அட்டை வடிவமைப்பையும், உள்ளோவியங்களையும் நண்பர் சீனிவாசன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார். சிறப்பிதழ் ஆசிரியர் விஜயசங்கருக்கும்,சிறப்பான ஒவியங்களைத் தந்த சீனிவாசனுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள். ••

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல்

பிச்சினிக்காடு இளங்கோ நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள். நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் …

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல் Read More »

அறிவிப்புகள்

எனது நாவல் யாமம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி. •• சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ் நடத்தும் புகைப்படக்கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 31 வரை லலித் கலா அகாதமியில் நடைபெற உள்ளது. அதில் ஆகஸ்ட் 25 மாலை 5.30 மணிக்கு புகைப்படநூலை வெளியிடுகிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. •• ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 காலை 10.30 மணிக்குத் திருச்சி St. Joseph’s College ல் …

அறிவிப்புகள் Read More »

அஞ்சலி

எனதருமை நண்பரும் நான் சென்னையில் வாழ்வைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மகன் பாலகைலாசம் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். உடல்நலக்குறைவின் காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற சேதி கேள்விபட்ட நாளில் இருந்தே காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் என்னை நிலை குலையச்செய்துவிட்டது. அழுதுவீங்கிய கண்களுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தேன். என்னால் நண்பர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. சொல்லவும் முடியாமல் மீளவும் முடியாமல் …

அஞ்சலி Read More »

மதுரையில் புத்தக வெளியீடு

மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30 சனிக்கிழமை அன்று மாலை மதுரையில் நடைபெற உள்ளது இடம் : நார்த்கேட் ஹோட்டல், மதுரை. (தமுக்கம் மைதானம் எதிரில்) நேரம் : மாலை ஆறுமணி நாள்  : 30.08.2014 *** நீரிலும் நடக்கலாம் எனது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு, பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கியது •• காஃப்கா எழுதாத கடிதம் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், …

மதுரையில் புத்தக வெளியீடு Read More »

தூண்டில்

நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது. அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை. தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், …

தூண்டில் Read More »

நிமித்தம் – விருது

எனது நிமித்தம் நாவலுக்கு `மாசிலா விஜயா பரிசு` கிடைத்துள்ளது. ரூபாய் பத்தாயிரம் பணமும் பாராட்டு பத்திரமும் இதற்காக அளிக்கபடுகிறது இவ்விருதை உருவாக்கியிருப்பவர் சவுதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் வ. மாசிலாமணி மற்றும் தென்றல் குடும்பத்தினர். இலக்கியம், அறிவியல், சமூகசேவை ஆகிய மூன்று துறையைச் சேர்ந்தவர்களுக்கு இவ்விருது வழங்கபடுகிறது. இந்த ஆண்டு முதல் இவ்விருது உருவாக்கபட்டுள்ளது. •••

காற்றடித்த யானை.

உருவகக்கதைகள் தமிழில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இவை தனி வகைமையாகக் கருதப்படுகின்றன, குறுங்கதைகளை எழுதியவர்களில் மிரோஜெக், ஹென்ரிச் ப்யூல். யாசுனாரி கவாபதா, போர்ஹே, பார்த்தல்மே போன்றோர் முக்கியமானவர்கள். உருவக்கதைகளில் முக்கியமான படைப்பாக ஸ்லவொமிர் மிரோஜெக்கின் யானை கருதப்படுகிறது. இக்கதை தமிழில் நடை இதழில் வெளியாகி உள்ளது. ஸ்லவொமிர் மிரோஜெக். போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர். அவரது நடுக்கடலில் (Out at Sea)என்ற நாடகம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நாடகவெளி இதழில் வெளியாகியிருக்கிறது. மிரோஜெக்கின் இரண்டு குறுங்கதைகளைப் …

காற்றடித்த யானை. Read More »

ஒவியங்களும் புகைப்படங்களும்

இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன். இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார். மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த …

ஒவியங்களும் புகைப்படங்களும் Read More »