மௌனியோடு ஒரு மாலை
நேற்று மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் …