வண்ணதாசன் கூட்டம்

நவீன தமிழ் சிறுகதையுலகின் முன்னோடி ஆளுமை, எழுத்தாளர் வண்ணதாசன் எழுதத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சந்தியா பதிப்பகமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து சிறப்பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது செப்டம்பர் 7ம் தேதி மாலை 5மணிக்கு அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் இக்கூட்டம் நடைபெற உள்ளது அதில் வண்ணதாசன் எழுத்துலகம் குறித்து நான் சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். இந்த நிகழ்வில்  எழுத்தாளர் ச, தமிழ்செல்வன், எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குனருமான …

வண்ணதாசன் கூட்டம் Read More »

உறுபசி – தீராத மோகம்

 அமெரிக்காவில் வாழும் கணிதவியல் அறிஞர் பாஸ்கர் லட்சுமண் உறுபசி நாவல் குறித்து எழுதியுள்ள விமர்சனம்,  பாஸ்கர், தேர்ந்த இலக்கிய வாசகர், சொல்வனம் இணைய இதழில் கணித ஆளுமைகள் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதிவருகிறார், ***  எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம் -பாஸ்கர் லட்சுமண் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து …

உறுபசி – தீராத மோகம் Read More »

சிம்கோ ஏரி

டொரன்டோவில் இருந்து மூன்று மணிநேரப் பயணத்தில் உள்ள சிம்கோ  ஏரிக்குச் சென்றிருந்தேன், ஒன்டாரியோ ஏரியை விடச் சிறியது என்றாலும் சிம்கோ ஏரி மிகவும் அழகானது, ஏரியைக் காண்பதற்கு விருப்பமான நண்பர்களுடன் செல்வது கூடுதல் சந்தோஷம் தரக்கூடியது, அன்று என்னுடன் மூர்த்தி, நவம் மாஸ்டர், செல்வன் மூவரும் உடன் வந்தார்கள், ஏரிக்குச் செல்வதற்காக பிரதான சாலையை விட்டு விலகி மரங்கள் அடர்ந்த பசுமையான சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தோம், சூடான டிம் ஹார்டன் காபி, தொடர்ந்த இலக்கிய உரையாடல்கள், …

சிம்கோ ஏரி Read More »

சிட்னி சாப்ளின்

சாப்ளினைத் தெரிந்த பலருக்கும் அவரது சகோதரன் சிட்னி சாப்ளினைத் தெரியாது, ஒரு நிழலைப்போல சாப்ளின் கூடவே இருந்து அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சிட்னி, சாப்ளினுக்குக் கிடைத்த  திரைப்பட வாய்ப்புகள், மற்றும் அவரது பொருளாதார வளர்ச்சி யாவும் சிட்னி உருவாக்கிக் கொடுத்ததே, சார்லி சாப்ளினை விட நான்கு வயது மூத்தவர் சிட்னி, அவரது அப்பா யார் எனத்தெரியவில்லை, அம்மா ஹானா தனது பதினாறாவது வயதில் ஹவாக்ஸ் என்ற இளைஞரோடு பழகித்  திருமணம் செய்து கொள்ளாமலே அவரைப் …

சிட்னி சாப்ளின் Read More »

கவிதை கேட்ட நரி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் மிக முக்கியமானவர் மட்சுவோ பாஷோ, அவரைப்பற்றிய Basho And The Fox என்ற புத்தகத்தைப் படித்தேன், டிம்.ஜே,மேயர்ஸ் குழந்தைகளுக்காக எழுதிய சித்திரங்களுடன் உள்ள புத்தகமது பாஷோ டோக்கியோ நகரின் புறவெளியில் இயற்கையோடு இணைந்தபடி சிறிய குடிலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பாஷோ என்பதற்கு வாழைமரம் என்று தான் பொருள், அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு செர்ரி மரமிருந்தது, இந்த மரத்தடியில் அமர்ந்தபடியே அதன் பூக்களை ரசிப்பது பாஷோவிற்கு பிடித்தமான …

கவிதை கேட்ட நரி Read More »

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி …

தண்ணீரின் சிறகுகள் Read More »

ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் …

ஒவியன் வாங்ஃபோ Read More »

நேர்காணல்

இந்தவார சண்டே இன்டியன் இதழில் எனது விரிவான நேர்காணல் வெளியாகி உள்ளது, அதை வாசிப்பதற்கான இணைப்பு https://www.thesundayindian.com/ta/story/34/2611/

ஷேக்ஸ்பியரின் முன்னால்

டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட்,  பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று …

ஷேக்ஸ்பியரின் முன்னால் Read More »

லெபனான்

சமீபத்தில் பார்த்த இஸ்ரேலியத்திரைப்படம் லெபனான், முழுப்படமும் ஒரு பீரங்கி வண்டிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருப்பது இதன் முதற்சிறப்பு, பீரங்கிவண்டியை ஒரு வலிமையான போர்கருவியாக மட்டுமே அறிந்து வைத்திருந்த நமது பொதுப்புத்தியை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது, யுத்த முனையில் பீரங்கிகள் கடந்து போவதையும் அவை இலக்குகளைத் தாக்கி அழிப்பதையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம்,  ஆனால் பீரங்கி வண்டி என்பது ஒரு தனியுலகம், அந்த வாகனத்தினுள் நாலு போர்வீரர்கள் பகலிரவாகத் தங்கியிருக்கிறார்கள், இலக்கைக் குறிவைத்துத் தாக்க ஒருவர், வண்டியை இயக்க மற்றவர், யாரைத் தாக்குவது …

லெபனான் Read More »