குறும்பட விழா
நவம்பர் 5ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் உள்ளே அமைந்துள்ள ப்ரிவீயூ திரையரங்கினுள் நண்பர் அருண்பிரசாத் இயக்கி நான் கதைவசனம் எழுதியுள்ள ஐந்து குறும்படங்களின் திரையீட்டு விழாவும் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது நெய்வேலிபுத்தகக் கண்காட்சியும் தினமணியும் இணைந்து நடத்திய குறும்படப்போட்டியின் சிறந்த படம், சிறந்த எடிட்டிங். டான் குறும்படப்போட்டியில் சிறந்த படம். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்வின் சிறந்த குறும்படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பல முக்கிய விருதுளைப் …