தும்பை பூத்த பாதை

மலையடிபட்டி என்ற ஊருக்கு சைக்களில் சென்று கொண்டிருந்தேன். அந்த பாதையில் ஆட்களேயில்லை. வழியெங்கும் தும்பைச் செடிகள் பூத்திருந்தன. இவ்வளவு தும்பைகள் பெருகிய பாதையைக் கண்டதேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கி நின்று பாதையைத் திரும்பி பார்த்தேன். முன்னும் பின்னும் வளைந்து கிடந்தது பாதை. தொலைவில்  ஊர் தெரிகிறது. எல்லா கிராமங்களும் வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகவே இருக்கின்றன. அதன் தோற்றம் யாரோ வரைந்து வைத்துவிட்டு போன சித்திரம் போலவே இருக்கிறது. மரங்கள், வீடுகள், வைக்கோல் போர்கள், …

தும்பை பூத்த பாதை Read More »

மாதுளையின் பாடல்

The Color of Pomegranates என்ற செர்ஜி பரஜினேவின் திரைப்படத்தை பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரஷ்யப் படமது. பரஜினேவ் செர்ஜியாவை சேர்ந்த ஆர்மீனியர். சையத் நோவா (Sayat-Nova) என்ற பதினேழாம் நூற்றாண்டு கவிஞனின் வாழ்க்கையை பற்றியது. ஆர்மீனியாவின் தேசியக்கவியாக கொண்டாடப்படும் சையத் நோவா கம்பள நெசவு நெய்யும் குடும்பத்தில் பிறந்து தனது கவித்துவத்தால் அரசவைக் கவிஞனாக உயர்ந்து காதலின் காரணமாக வெளியேற்றபட்டு நாடோடி பாடகனாக புகழ்பெற்று இறந்து போனார். ஆயிரம் பாடல்ளுக்கு மேலாக பாடியிருக்கிறார். …

மாதுளையின் பாடல் Read More »

கனகசபை

கனகசபை என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் கனகு தான். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தில் வாழ்ந்தவன். நாற்பது வயதை கடந்திருக்கும். இலக்கியம் எழுத்து புத்தக வாசிப்பு என்று தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான். நான் அறிந்தவரை இலக்கியத்திற்காக கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள் கனகு மட்டுமே. கனகு ஒரு இலக்கியவாதிக்கு போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி …

கனகசபை Read More »

26 நாளில் ஒரு காதல்

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் 26 நாட்கள் (Twenty Six Days From the Life of Dostoyevsky)என்ற படத்தை நேற்றிரவு  பார்த்தேன். தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அவரிடம் உதவியாளராக பணிக்கு வந்த அன்னா என்ற இளம்பெண்ணுக்குமான காதலும் சூதாடி நாவலை எழுதுவதற்கு அவர் அடைந்த நெருக்கடியான மனநிலையுமே படத்தின் ஆதார கதை. இவர்களது காதலை பற்றி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்  என்றொரு நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். அது ஒரேயொரு முறை நிகழ்த்தபட்டது. தஸ்தாயெவ்ஸ்கியின்  Notes from Underground என்ற சைபீரிய சிறைச்சாலை அனுபவங்களை …

26 நாளில் ஒரு காதல் Read More »

திரை பார்த்தல்

ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த  பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது? யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக …

திரை பார்த்தல் Read More »

நினைவு ஒளிர்கிறது

ஒரு ஆளால் எத்தனை பேரை நினைவில் வைத்திருக்க முடியும். நான்கு பேர் சந்தித்து கொள்ளும் போது நினைவில் நானுறு பேர் பகிர்ந்து கொள்ளப்படுகிறார்கள் என்பார்கள். நினைவு கொள்ளுதல் நாம் விரும்பி உருவாவதை விட நடப்பின் வழியாக தானே உருக் கொள்வது தான் அதிகமாக ஏற்படுகிறது. சிறுவர்கள் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். பலநாட்கள் எனது பையன் நேற்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தூங்கி எழுந்து கேட்டிருக்கிறான். ஒவ்வொரு வகுப்பாக என்னோடு படித்தவர்களின் பெயர்கள் முகங்களை …

நினைவு ஒளிர்கிறது Read More »

விருந்தாளிகளின் தலையணை

ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்களது வீடு மிகச்சிறியது. இரண்டே அறைகள். ஆனாலும் அவர்களோடு நான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு சொன்னதால் இரவு தங்கியிருந்தேன். இரவு உணவு முடிந்து பேசிக் கொண்டிருந்தோம். படுப்பதற்கான பாய் தலையணைகள் கொண்டு வந்து தந்தார் நண்பரின் மனைவி. எங்கள் பேச்சு ஹாலில் சுவாரஸ்யமாக நீண்டு கொண்டிருந்தது. இடையில் தண்ணீர் குடிக்க உள்ளே எழுந்து போனபோது நண்பரின் கடைசிமகள் உறங்காமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். ஐந்து வயதிருக்கும். …

விருந்தாளிகளின் தலையணை Read More »

ராபர்ட் ருவாக்

ஹெமிங்வேயை நினைவு வைத்துக் கொண்டிருக்கும் பலரும் ராபர்ட் ருவாக்கை (Robert Ruark) நினைவு வைத்திருப்பதில்லை. அமெரிக்க இலக்கியத்தில் ஹெமிங்வேக்கு நிகரான எழுத்தாளர் ருவாக். ஹெமிங்வேயின் வாழ்க்கையும் ருவாக்கின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கிறது. இருவருமே பத்திரிக்கையாளர்களாகத் துவங்கி எழுத்தாளர் ஆனவர்கள்.  இருவருக்குமே சாகசப் பயணங்களில் வேட்டையாடுதலில் காளைச் சண்டையில் அதிக ஈடுபாடு இருக்கிறது. ஹெமிங்வேயோடு ருவாக் சேர்ந்தே பயணம் செய்திருக்கிறார். ஒன்றாகவே வேட்டையாடியிருக்கிறார்கள். ஆப்பிரிக்க பயணம் போயிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்க இலக்கியத்தின்  பிதாமகனை போல …

ராபர்ட் ருவாக் Read More »

அன்பு தியோ

எனக்கு தியோவைப் பிடிக்கும். அவன் ஒவியர் வான்கோவின் தம்பி. நான்கு வயது இளையவன். தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நிஜவாழ்வில் இருந்தால் எப்படியிருந்திருப்பான் என்பதற்கு தியோவை உதாரணமாகச் சொல்லலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின் எளிய மனிதன். ஆனால் அன்பும் கருணையும் உருவானவன். அறிந்த அறியாத மனிதர்களுக்காக தன்னிடமிருப்பதை முழுமையாக பகிர்ந்து கொள்பவன். அடுத்தவரின் துயரங்களுக்காக மனம் வருந்துபவன். அவனிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவுமில்லை. அதே நேரம் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களுக்காக  அவன் கைகொடுத்து உதவுகிறான். காதலும் …

அன்பு தியோ Read More »

குறும்படங்கள் பத்து

இணையத்தில் சமீபத்தில் பார்த்த சில குறும்படங்கள். 1) Not an every day story https://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0 2) Second Wind https://vimeo.com/10019015 3) Melancholy Soldier (Short Film Version) https://www.youtube.com/watch?v=6cfgXuCEwFs 4) the big shave https://www.youtube.com/watch?v=QrCaJ-8Q1Y0 5) Replay short film https://www.youtube.com/watch?v=qKKGk1HZa6A 6) Lavatory – Lovestory 2007 https://www.youtube.com/watch?v=_cHTt8RJJWQ 7) Knal – Bang – short film https://www.youtube.com/watch?v=zaG7_QyQQhY 8)Life Circle- Sri Lanka Short Film https://www.metacafe.com/watch/2599829/life_circle_sri_lanka_short_film/ 9) …

குறும்படங்கள் பத்து Read More »