இணைய கிருமி


நேற்றிரவு எனது நண்பர் தொலைபேசியில் அழைத்து உங்கள் இணையம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. யாரோ விஷமிகள் இதை செய்திருக்கிறார்கள். உடனே சரி செய்யுங்கள் என்றார். மனம் உடைந்து போய்விட்டேன்.  இரண்டு ஆண்டு உழைப்பு மற்றும் எனது அன்றாட தொடர்பு அத்தனையும் நாசமாக்கபட்ட வலியில் தூக்கமில்லைஇணையத்தில் இப்படியான விஷக்கிருமிகள் பரவியிருப்பது எத்தனை ஆபத்தானது.. அத்துடன் என் இணையத்தை தொடர்பு கொள்ளும் பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க துவங்கியிருந்தார்கள்
எனக்கு இணைய தொழில் நுட்பம் எதுவும் தெரியாது. எனது இணைய முகப்பில் வைரஸ் ஒன்றை புகுத்தி உள்ளீடுகளை தகர்த்திருக்கிறார்கள் என்கிறார்கள்.


இன்று எனது வலைத்ளத்தின் நிர்வாக நண்பர்கள் போராடி கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். முழுதாக மீட்பதற்கு ஒரு நாள் ஆக கூடும் 

0Shares
0