இஸ்தான்புல்லின் கண்

அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான  இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள்.  இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.

பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் திரை நட்சத்திரங்களையும் இவர் எடுத்த புகைப்படங்கள் அபாரமானவை. இவர் எடுத்த யாசர் அராபத்தின் புகைப்படம் டைம் இதழின் அட்டையில் இடம்பெற்றுள்ளது.

இஸ்தான்புல்லின் மாறிவரும் முகத்தை அரா குலார் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வீதிகள். கடைகள். வாகனங்கள். பணியிடக் காட்சிகள், கட்டிடக்கலையின் உருவான மாற்றங்களை இவரது புகைப்படங்களின் வழியே துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது

அந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் காலத்தின் ஒவியமாகக் கருதப்படுகின்றன.

அவரது புகைப்படங்களின் சிறப்பம்சம் ஒளி மற்றும் நிழலின் நாடகமாகும். புகைப்படத்தில் வெளிப்படும் ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாடு தனித்த அழகியலை உருவாக்குகிறது.

புகைப்படக்கலைஞராக மட்டுமின்றிப் பத்திரிக்கையாளராகவும் ‘குலார் விளங்கினார். இவரைப் பற்றிய இந்தச் செய்தி தொகுப்பில் குலார் தனது பார்வையில் புகைப்படக்கலையைப் பற்றிச் சிறப்பாக விவரிக்கிறார்.

Thanks

Ara Güler

Museum of Islamic Art

0Shares
0