கேணி


எழுத்தாளர் ஞாநி  அண்மையில் கேகேநகருக்கு வீடு மாறி குடியேறியிருக்கிறார், அந்த வீட்டின்  பின்னால் அழகான கிணறும் தோட்டமுமாகவும் உள்ளது.


 


அந்த கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில்  கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கியுள்ளார்


 


நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை சிநேகிதர்களிடம் ஊக்குவிப்பது தொடர்பாக கேணி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு துவங்கி 6.30 வரை ஒரு படைப்பாளியோ, வாசகரோ இலக்கியம் தொடர்பான பகிர்வாக முதலில் பேசுவார். தொடர்ந்து எல்லாரும் அவருடன் கல்ந்து உரையாடும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.


 


இதன் முதல் கூட்டத்தில் நான், எனக்கு  பிடித்த சிறுகதைகள் பற்றி பேச உள்ளேன்


விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளலாம்


 


நாள் : 14.06.09 ஞாயிறு


நேரம் : சரியாக 4.30 மணி


இடம் : 39, அழகிரிசாமி சாலை, ( பத்ம சேஷாத்திரி பள்ளி அருகில் )


கே.கே.நகர்,  சென்னை, தொடர்பிற்கு :  9444024947

0Shares
0