தமிழ் சங்கம் விருது

 இந்த ஆண்டிற்கான தமிழ் சங்கம் விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக சேலம் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விருது பதினைந்தாயிரம் ரொக்கமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கியது 

 நவீன தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் சேலத்தில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

விருப்பமான நண்பர்கள் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்

••

சேலம் தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழ் இலக்கியத்தினை மேம்படுத்திய சிறந்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக சேலம் தமிழ்சங்கம் முதன்முறையாக தமிழ்சங்க விருதுகளை வழங்க இருக்கிறது

ரூபாய் பதினைந்தாயிரம் ரொக்கப்பணமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கிய இந்த விருது இந்த ஆண்டு மூன்று முக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகாலமாக தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்து வரும் எழுத்தாளர் திரு.பிரபஞ்சன் அவர்களுக்கும், நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், தனித்துவமிக்க இளம்படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது

விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் தமிழ் சங்க வளாகத்தில் டிசம்பர் 26 ஞாயிறு காலை பத்துமணி (26.12.2010) அளவில் நடைபெற உள்ளது, சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி அவர்கள் இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்

தமிழ் ஆய்வாளர்களுக்கும் பொதுவாசகர்களுக்கும் பயன்படும் விதத்தில் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் முழுமையாக விலைக்கு வாங்கப்பட்டு தமிழ் சங்க நூலகத்தில் வைக்கப்பட இருக்கின்றது.

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறோம்

இப்படிக்கு

கவிஞர் க.வை.பழனிச்சாமி

சேலம் தமிழ்சங்கம்

0Shares
0