பயனற்றதன் பயன்கள்

பெல்ஜிய-ஆஸ்திரேலிய எழுத்தாளரான சைமன் லீஸ் சீன கலை மற்றும் இலக்கியத்தில் புகழ்பெற்ற அறிஞர். அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இவரது கலை, இலக்கியம், வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே The Hall of Uselessness: Collected Essays

சீன பண்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொண்ட உண்மையின் அடையாளமாகவே இந்த நூலின் தலைப்பும் வைக்கபட்டிருக்கிறது. பயனற்றதன் பயன்பாடு பற்றிய பார்வைகளை முன்வைக்கிறார்.

பிரெஞ்சு இலக்கியம் குறித்த கட்டுரைகளில் பால்சாக் பற்றியது சிறப்பாகவுள்ளது.

பால்சாக்கின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்தவிரிவான கட்டுரை அவரது சுயசரிதையின் மீதான விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது

அதில் காதல் மற்றும் புகழுக்காக மட்டுமே தான் எழுதுவதாகப் பால்சாக் சொல்கிறார். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைப் பால்சாக் எழுதியுள்ளதை வியந்து சொல்லும் சைமன் லீஸ் அவரது காலத்தில் விக்டர் ஹியூகோவை விட அவரால் புகழ்பெற முடியவில்லை. பால்சாக் இறந்த போது அவரது பெட்டியில் 10,000 க்கும் மேற்பட்ட பெண் ரசிகர்களின் கடிதங்கள் காணப்பட்டன என்று குறிப்பிடுகிறார்.

பால்சாக்கின் குழந்தைப் பருவத்தின் கசப்பான அனுபவங்கள் மறக்க முடியாதவை. அன்னையின் புறக்கணிப்பு மற்றும் ஸ்பார்டன் போர்டிங் பள்ளியில் நடந்த கொடூரங்கள் அவரிடம் ஏற்படுத்திய பாதிப்புகளே அவரது எழுத்தில் பின்னாளில் வெளிப்பட்டன என்கிறார்.

இந்தத் தொகுப்பிலுள்ள சீனப்பண்பாடு மற்றும் கலைகள் குறித்த சைமன் லீஸின் கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. குறிப்பாக Calligraphy எனப்படும் சித்திரஎழுத்துச் சீனாவில் ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த கட்டுரை விரிவான பார்வையை வழங்குகிறது. அதில் Lan ting xu, or Preface to the Orchid Pavilion, by Wang Xizhi என்ற சீனாவின் முதல் சித்திர எழுத்துப்பிரதியின் வரலாற்றையும் அது பதிப்பிக்கபட்டதன் பின்னுள்ள உண்மைகளையும் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

பல வருடங்களாகத் தொலைந்து போய்விட்டதாக கருதப்பட்ட ஆர்க்கிட் பெவிலியன் என்ற சித்திர எழுத்துப்பிரதி ஒரு துறவியின் கையில் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள். . இதற்காகப் பியான்சாய் என்ற துறவியைத் தேடி மாறுவேஷத்தில் வந்த ஒருவர் தன்னிடம் பல்வேறு சித்திர எழுத்துகள் இருப்பதாக ஆசை காட்டுகிறார். பியான்சாய் அதை எல்லாவற்றையும் விட அரிய பிரதி தன்னிடமிருப்பதாக ஆர்க்கிட் பெவிலியன் பிரதியை தேடி எடுத்துக் காட்டுகிறார். உடனே தனது மாறுவேஷத்தை கலைத்த அரசு அதிகாரி அதனைப் பறிமுதல் செய்து அரண்மனைக்குக் கொண்டு போவதாக அறிவிக்கிறார். இந்த அதிர்ச்சியைப் பியான்சாயால் தாங்க முடியவில்லை. அவர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அதன்பிறகு அவரால் உணவு உண்ண முடியவில்லை. தொண்டையில் எந்த உணவும் இறங்க முடியாத இறுக்கம் ஏற்படுகிறது. சில மாதங்களில் அவர் இறந்தும் போனார் என்கிறார் சைமன் லீஸ். நூற்றாண்டுகளைக் கடந்து இந்த சித்திர எழுத்துப்பிரதி இன்றும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.

சீனக்கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கும் சைமன் லீஸ் சிறப்பான வழிகாட்டுதலைத் தருகிறார். குறிப்பாகச் சீனாவின் ஒவிய மரபிற்கும் கவிதைகளுக்குமான உறவையும் சிறந்த கவிஞர்கள். சிறந்த ஒவியர்களாக எப்படியிருந்தார்கள் என்பதையும் விளக்குகிறார்.

“When the Chinese build a house, they start from the roof”;

“When in mourning, they wear white”; “They write upside down, and right

to left”; “When greeting someone, they shake their own hand,” எனச் சீனர்களின் செயல்கள் மேற்குலகிலிருந்து எப்படி மாறுபட்டது. அதற்கு என்ன காரணம் என்பதையும் எடுத்து சொல்கிறார்.

சீனக்கலைகளின் ஆதாரப்புள்ளியைத் தொட்டுக்காட்டுகிறார் சைமன் லீஸ்

prime aim of their activity is the cultivation and development of their own inner life. One writes, one paints, one plays the zither in order to perfect one’s character, to attain moral fulfilment by ensuring that one’s individual humanity is in harmony with the rhythms of universal creation

மௌனவாசிப்பு ஒரு காலத்தில் எவ்வளவு அரிய விஷயமாக இருந்தது என்பதற்கு அவர் தரும் உதாரணமிது.

When Saint Augustine first met Saint Ambrose, he was amazed by the exceptional ability the latter had to read silently: when reading, his lips did not move and the written message would pass directly from the book to his mind, without the intermediary of sound. This talent was still so rare at the time that Augustine felt moved later on to make a special note of it, betraying his own puzzlement

கன்பூசியஸ் பற்றிய அவரது மதிப்பீடுகளும் பார்வைகளும் சிறப்பானவை.

0Shares
0