பெயர் குழப்பம்

சக்கரவர்த்தி பீட்டர், வீரம் விளைந்தது என்ற இரண்டு ரஷ்ய நூல்களை நான் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் என நினைத்து பலரும் என்னைத் தொடர்பு கொண்டு அதன் பிரதிகளைக் கேட்கிறார்கள். நான் இந்த நூல்களை மொழியாக்கம் செய்யவில்லை.

அதைச் செய்தவர் தோழர் எஸ்.ஆர்.கே. இவர் ஜெயகாந்தனின் ஆசான்.மதுரைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன். இடது சாரி இயக்கத்தலைவர். அவர் தான் இந்தநூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்

பலரும் எஸ். ராமகிருஷ்ணன் என்றதும் நான் என நினைத்துக் குழம்பிக் கொள்கிறார்கள். டாக்டர் எஸ்.ஆர்.கே மொழியாக்கம் செய்த இந்த நூல்கள் நியூசெஞ்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது

இது போலவே க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதி க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கபட்டது. அதை நான் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டு எனது பதிப்பகத்தினை தொடர்பு கொள்கிறார்கள்.

கசடதபற  இதழில் உங்கள் பங்களிப்பு பற்றி சொல்லுங்கள் என எழுத்தாளர் சா. கந்தசாமி  மறைவின் போது என்னிடம் ஒரு தொலைக்காட்சி  நிருபர் கேட்டார். அது க்ரியா எஸ். ராமகிருஷணன் எனச் சொல்லி அவரைத் தொடர்பு கொள்ளச் சொன்னேன்

இவை பெயர் குழப்பம் காரணமாக  நேரும் சங்கடங்கள்.

•••

0Shares
0