சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது.

தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது
வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள்.
வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.
இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் கொண்டாடும் சொல்வனத்தின் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது.
நீங்கள் வாசித்த, நேசித்த வங்கப் படைப்பாளிகள், நாவல்கள் பற்றி சிறப்பிதழுக்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.
தமிழுக்கு வளம் சேர்க்கும் தீவிர இலக்கியச் செயல்பாட்டினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சொல்வனத்திற்கு எனது வாழ்த்துகள்
படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
solvanam.editor@gmail.com n