தி இந்து தமிழ் நாளிதழ் தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக சிறப்புவிழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நான் உரையாற்றுகிறேன்.
நிகழ்வினை எழுத்தாளர் ந.முத்துசாமி துவங்கி வைக்கிறார். விருதுகளை வழங்கி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றுகிறார்
சேத்பட்டிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

