24 சிறுபாடல்கள்

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமகாலக் கவிஞர்கள் பற்றிய கவிதையின் கையசைப்பு என்ற தடம் இதழில் வெளியான பத்தியிலும் அவரைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். கவிஞர் சமயவேல் அவரது பத்து கவிதைகளை மொழியாக்கம் செய்து உதவியிருந்தார்.

தேர்வு செய்யப்பட்ட கோ யுன் கவிதைகளை 24 சிறுபாடல்கள் என்ற தொகுப்பாக விவேக் கிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். விவேகானந்தன் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இது இவரின் முதல் படைப்பு.

இலவச சிறுவெளியீடாக இதனை வெளியிட்டுள்ளார்கள்

இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த கவிஞர் ராணிதிலக் விக்ரம் மற்றும் வி.என். சூர்யாவிற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் FIRST PERSON: SORROWFUL தொகுதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழில் முதன்முறையாகக் கோ-யுன் கவிதைத் தொகுதி வெளிவருகிறது.

இலவச சிறுவெளியீடினை இந்த வலைப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

••

உறைபனியில் ஒரு வெள்ளைச் செவ்வந்திப்பூ; அது அவளின் தொடக்கம்.

ஈரப் பனியில் ஒரு வெண் சிகப்பு மலர்; அது அவளின் முடிவு.

இன்று மீண்டும் ஒருமுறை,

அவள் இருக்கிறாள் மலரின் தொடக்கமாகவும் முடிவாகவும்

••

நடனமாடிக்கொண்டே விழுந்துகொண்டிருக்கின்றன

இலைகள்.

இந்த உலகை விட்டு வெளியேறும்போது

நானும் நடனமாடிக்கொண்டேதான் போவேன்.

••

நீண்டகாலமாக மறுபதிப்பு வெளியிடாமல் இருந்த நகுலனின் அந்த மஞ்சள் நிறப்பூனை இந்த வலைப்பக்கத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது.

https://kaavirimagazine.blogspot.com

0Shares
0