மதுரை சந்திப்பு

உயிரோசை இணைய தளத்தின்  ஓராண்டு நிறைவு விழாவினை ஒட்டி உயிர்மை பதிப்பகம் நிகழ்ச்சி ஒன்றினை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை காலை  மதுரையில் நடத்துகிறது.


 


இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்உயிரோசையை முன் வைத்து


 


என்ற அமர்வில் நானும் சாருநிவேதிதாவும்  சிறப்புரையாற்ற இருக்கிறோம். இதுதவிர 10 நூல்களையும் உயிர்மை அங்கே வெளியிடுகிறது. முக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.


 


நாள்: 30.8.20009


ஞாயிறு காலை 10 மணி


இடம்:


ஹோட்டல் சுப்ரீம்


 110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி


மதுரை-625001


 


மேலும் மதுரையில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை புத்த்க கண்காட்சி நடைபெறவிருக்கிறது. ஆகஸ்ட் 30. 31 தேதிகளில் மாலை வேலைகளில் புத்த்க கண்காட்சியின்  உயிர்மை அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.


 


****


 


 


இந்த நிகழ்ச்சி தொடர்பாக மனுஷ்ய புத்திரன் அனுப்பியிருக்கும் செய்தி:


 


மதுரையில்  உயிர்மை நூல் வெளியீட்டு விழா


உயிரோசை ஓராண்டு நிறைவு விழா


 


உயிர்மை பதிப்பகம் மதுரையில் ஆகஸ்ட் 30,2009 ஞாயிறு காலை 9.30 மணிக்கு உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழாவினையும் மாபெரும் புத்த்க வெளியீட்டு விழாவினையும் நடத்தவிருக்கிறது. தமிழின் முண்ணனி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்


 


இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் கடந்த ஓராண்டில் உயிரோசையில் எழுதபட்ட தொடர்களின் தேர்ந்தெடுக்கபட்ட ஆக்கங்களின் நூல்வடிவமாகும். ஒரு இணைய இதழ் ஓராண்டின் நிறைவில் தான் வெளியிட்ட ஆக்கங்களிலிருந்து பத்து நூல்களை வெளியிடுவது இதுவரை இணைய தளவரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனை. முற்றிலும் மாறுபட்ட துறைகளையும் பார்வைகளையும் சார்ந்து இந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இது உயிரோசையில் கடந்த ஓராண்டில் வெளிவந்த ஆக்கங்களில் சிறிய பகுதி மட்டுமே. தொடர்ந்து பல நூல்கள் இந்த வரிசையில் வெளிவர உள்ளன.


 


இத நிகழ்வில் உயிரோசையின் வாசகர்களை பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


 


மேலும் மதுரை புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மாலை வேலைகளில் சாருநிவேதிதா,


எஸ். ராமகிருஷ்ணன், எம்.யுவன், சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்தித்து உரையாடலாம்.


 


புத்த்க கண்காட்சி நடைபெறும் நாட்களில் உயிர்மை-உயிரோசை வாசகர்கள் எல்லா நாட்களிலும் என்னை மதுரையில் சந்திக்கலாம்.


 


மனுஷ்ய புத்திரன் தொடர்பு எண்: 9444366704


 


***


 


நிகழ்ச்சி நிரல்


 


மதுரையில்  உயிர்மை நூல் வெளியீட்டு விழா


உயிரோசை ஓராண்டு நிறைவு விழா


 


 


 


நாள்: 30.8.20009


ஞாயிறு காலை 10 மணி


இடம்:


ஹோட்டல் சுப்ரீம்


 110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி


மதுரை-625001


 


 


முதல் அமர்வு:


நூல் வெளியீட்டு விழா


தலைமை: கே.வைத்தியநாதன்


ஆசிரியர், தினமணி


 


1. கடலில் ஒரு துளி


 ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி


 


கருத்துரை: தமிழவன்


 


2. கிராமத்து தெருக்களின் வழியே


ஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்


 


கருத்துரை: சுந்தர் காளி


 


3. இடம்-காலம்-சொல்-


ஆசிரியர்: இந்திரஜித்


 


கருத்துரை: சமயவேல்


 


4. வேறு வேறு உலகங்கள்


ஆசிரியர்:அ.ராமசாமி


 


கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்


 


5. செல்லுலாயிட் சித்திரங்கள்


ஆசிரியர்: தமிழ் மகன்


 


கருத்துரை: நடிகர் சண்முகராஜா


 


6. தெய்வங்கள் எழுக


ஆசிரியர்: வாஸந்தி


 


ருத்துரை: மனோஜ்


 


7. இன்னும் மிச்சமிருக்கும் இருள்


ஆசிரியர்: மாயா


 


கருத்துரை: அ.ராமசாமி


 


8. தமிழுணர்வின் வரைபடம்


ஆசிரியர்: தமிழவன்


 


கருத்துரை. ந.முருகேச பாண்டியன்


 


9. இன்றிரவு நிலவின் கீழ்


நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்


தமிழில்: ஆர். அபிலாஷ்


 


கருத்துரை: யுவன் சந்திர சேகர்


 


10. சினிமாவின் மூன்று முகங்கள்


ஆசிரியர்: சுதேசமித்திரன்


 


கருத்துரை: சுகுமாரன்


 


 


இரண்டாம் அமர்வு


 


உயிரோசை ஓராண்டு நிறைவு விழா


 


இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்


உயிரோசையை முன் வைத்து


 


சிறப்புரைகள்


 சாருநிவேதிதா


 எஸ்.ராமகிருஷ்ணன்


 


 


****


 


 

0Shares
0