காகா காலேல்கர் இந்திய நதிகளைத் தேடிச் சென்ற தனது பயணத்தை ஜீவன்லீலா என்ற நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இதைப் பற்றி நான் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

நீண்டகாலமாக அச்சில் இல்லாத இந்த நூலை சாகித்ய அகாதமி மீண்டும் பதிப்பித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் ஒரு வாசகர் இதன் பிரதியை நீண்டகாலமாகத் தேடிவருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
சாகித்ய அகாதமி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சாகித்ய அகாதமி அரங்கிலும் இந் நூல் கிடைக்கும்
