பூமணிக்கு விருது

பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’-நாவலுக்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமிக்க படைப்பாளியாக கொண்டாடப்படும் பூமணி வெக்கை,பிறகு , நைவேத்தியம்,  ஆகிய முக்கிய நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கருவேலம் பூக்கள் திரைப்படத்தை என்எப்டிசிக்காக இயக்கியிருக்கிறார்.

இவரது அஞ்ஞாடி நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி 1984 வரை நீள்கிறது. சிவகாசிக்கலவரம் குறித்த விரிவான களஆய்வினை மேற்கொண்டு பூமணி இந்நாவலை எழுதியது குறிப்பிடத்தக்கது

0Shares
0