சிறார் இலக்கிய முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக நாளை திருவண்ணாமலை செல்கிறேன்.
மே 16 மற்றும் 17 தேதிகளில் திருவண்ணாமலையில் இருப்பேன்.
மே 18 முதல் 29 வரை மதுரை, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, மூணாறு என கோடை விடுமுறைப்பயணம்.
மே 23 அன்று மதுரையில் எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகளோடு ஒரு நாள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. வதனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு பிரேம்நிவாஸ் ஹோட்டலில் நடைபெறும்
தாவரங்களின் உரையாடல், வெயிலைக்கொண்டுவாருங்கள், பால்யநதி, நகுலன் வீட்டில் யாருமில்லை, காந்தியோடு பேசுவேன், மழைமான், புத்தனாவது சுலபம், அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, நீரிலும் நடக்கலாம் உள்ளிட்ட பத்து சிறுகதை தொகுதிகள் குறித்து பத்து எழுத்தாளர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்வு நடைபெற உள்ளது
இந்த நிகழ்வில் டாக்டர் பிச்சை, கவிஞர் கலாப்ரியா, கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித், விமர்சகர் முருகேசபாண்டியன், கவிஞர் யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் சந்திரா. கவிஞர் ஆத்மார்த்தி, கவிஞர் ஜீவலட்சுமி ஆகியோர் உரையாற்றுகிறார்கள், நிறைவாக நான் உரையாற்றுகிறேன்
•••