கருத்தரங்கு

”எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் மதுரையில் 23-ம் சனிகிழமை அன்று   ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளக் கட்டணமா என  சிலர் கேட்டுள்ளார்கள்,
நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் எதுவுமில்லை
எனது பத்து சிறுகதை தொகுதிகள் குறித்து விரிவான உரைகள் நடைபெற உள்ளது,
தோழர் எஸ் ஏ பெருமாள், கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிஞர்கலாப்ரியா  எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் டாக்டர் பிச்சை எழுத்தாளர் முருகேச பாண்டியன், கவிஞர்யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் மணிமாறன், எழுத்தாளர் சந்திரா  கவிஞர் ஜீவலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
மாலையில் எனது கதையுலகம் குறித்து நான் உரையாற்றுகிறேன்
இளம் எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்
வதனம் இலக்கிய அமைப்பு சார்பாக கவிஞர் ஆத்மார்த்தி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் : பிரேம் நிவாஸ் ஹோட்டல்

தங்கம் தியேட்டர் எதிரில் மேலபெருமாள் வீதி, மதுரை
நேரம் : காலை 10 முதல் மாலை 6 வரை
நாள் : சனிக்கிழமை மே 23. 2015

0Shares
0