புகைப்படங்கள் 1

உயிர்மை பதிப்பகம் நடத்திய எனது மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்பிற்குரிய உதயசந்திரன் ஐஏஎஸ். இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்,  எழுத்தாளர் ஷாஜகான், ஒவியர் விஸ்வம், டாக்டர் திருநாவுக்கரசு. ஐஐடி சசி, மணிமாறன், வழக்கறிஞர் தேவகுமார் . பங்கேற்ற நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வினை படப்பிடிப்பு செய்து இணையத்தில் பகிரும் ஸ்ருதி டிவிக்கும். சிறப்பான புகைப்படங்களை எடுத்து தந்த புகைப்படக்கலைஞர் பிரபுகாளிதாஸிற்கும் மிகுந்த நன்றிகள்

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா நிகழ்வினை  ராஜசேகர் தொகுத்து வழங்கினார், நிவேதனம் உணவகதின் குறிஞ்சி பிரபா சிற்றுண்டி வழங்கினார். இருவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

நூலினை மிகச்சிறப்பாக வெளியிடுள்ள உயிர்மை பதிப்பகத்திற்கும். செல்விக்கும், உயிர்மை பதிப்பக வடிவமைப்பாளர், பிழைதிருத்துபவர். ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

இந்த நிகழ்வினைத் துவங்கி வைத்து எனது நாவல் இடக்கை குறித்து அற்புதமான உரையாற்றிய என் நேசத்திற்குரிய கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு தீராதநன்றிகள்

0Shares
0