ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்கிழமை( 09 .08.2016 ) உரையாற்றினேன். பெரும்திரளான கூட்டம்.
புத்தகக் கண்காட்சியை மிகச்சிறப்பாக ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாடு செய்துள்ளார். காலையில் நண்பர்களை சந்தித்து அறையில் உரையாடிக் கொண்டிருந்தேன். மதியம் வேடியப்பன் மற்றும் அண்ணன் அறிவுமதியோடு ஐயப்பா மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அறைக்குத் திரும்புவதற்குள் நான்கு இளைஞர்கள் கோவையில் இருந்து வந்து காண்பதற்காக நின்றிருந்தார்கள். அவர்களுடன் புத்தக கண்காட்சியினுள் சென்று அரங்கினைப் பார்வையிட்டேன்.
ஈரோடு சிந்தனைப் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள். காலை ரயில் நிலையம் வந்து வரவேற்று அழைத்துப் போனது முதல் இரவு ரயில் ஏற்றிவிடும் வரை கூடவே இருந்து அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள்.
