சிறந்த சிறுகதை ஆசிரியரும், முன்னோடி நாடக ஆளுமையுமான எழுத்தாளர் ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முத்துசாமியோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். அவரது சிரித்த முகமும் அலாதியான குரலும், கைளை வீசிப் பேசும் பாணியும் மிகவும் வசீகரமானது.
தமிழ் நவீன நாடகத்திற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் முத்துசாமி.
தெருக்கூத்தினைத் தமிழர்களின் அடையாளமாக உயர்த்திப்பிடித்தவர் .
கூத்துப்பட்டறை என்ற நவீன நாடக அமைப்பை தோற்றுவித்துச் சிறப்பான நாடகங்களைத் தந்திருக்கிறார். அவரிடம் நடிப்பு பயின்றவர்களே இன்று முன்னணி திரைநட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவரது மாணவர்களே நவீன நாடகங்களை முன்னெடுத்து வருகிறார்கள்
ந.முத்துசாமியின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
••