விளக்கு விருது

அமெரிக்கத் தமிழர்களால் வழங்கப்படும் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2017ம் ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது

விருது பெறும் பா.வெங்கடேசன்,  ஆ.இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.வெங்கடேசன் மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். புனைவெழுத்தில் தனித்துவமிக்க மொழியை,கதையாடலை கைக்கொண்டு வருபவர் பா.வெங்கடேசன்.

வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி பாரதியியல் ஆய்வில் மிக முக்கியமானவர். புதுமைப்பித்தன் படைப்புகளை ஆராய்ந்து செம்பதிப்புக் கொண்டு வந்தவர். அச்சுவரலாறு குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருபவர். சர்வதேச அளவில் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் சிறந்த ஆய்வாளர்.

சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு விருது வழங்கி சிறப்பித்த விளக்கு அமைப்பிற்கும், கோ. ராஜாராம் உள்ளிட்ட அமெரிக்க நண்பர்களுக்கும் என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

0Shares
0