நன்றிகள்

சாகித்ய அகாதமி விருது பெறுவதற்காக டெல்லி சென்று இன்றிரவு  சென்னை திரும்பினேன்.

டெல்லியில் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அமைந்தது.

விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்பு செய்த ஊடகங்களுக்கும் செய்தி வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி.

இணையத்தில் நிறைய நண்பர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கும் நன்றி.

சிற்பி பாலசுப்ரமணியம், மாலன், பாரதிபாலன். புதுவை முருகன், தமிழவன், உள்ளிட்ட  சாகித்ய அகாதமி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டெல்லியில் ஐந்து நாட்களும் உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கும் மிகுந்த நன்றி. ராஜ்மோகன் உள்ளிட்ட சாகித்ய அகாதமி சென்னை அலுவலக நிர்வாகிகளுக்கும் நன்றி.

டெல்லியில் இருந்த நாட்களில் வரவேற்று உபசரித்த   நண்பர்கள் திருப்புகழ், முருகானந்தம்,  நெடுங்கிள்ளி,  ஷாஜகான், பென்னேஸ்வரன், முகுந்தன், பேராசிரியர் சந்திரசேகர், அருள் இனியன், அருண் குமார்,  குரு மூர்த்தி , கமல்நாத், பாலசுப்ரமணியன், டாக்டர் சீனிவாசன்,  கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் பரதன்,  ஜேஎன்யூ பல்கலைகழகத் தமிழ் துறை மாணவர்கள் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றி.

பயணத்தை திட்டமிடுவதற்கு பல்வகையிலும் உதவிபுரிந்த நண்பர் ரவி சுப்ரமணியனுக்கும் செங்கதிருக்கும் அன்பும் நன்றியும்.

National Gandhi Museum இயக்குனர் அண்ணாமலை அவர்கள் ராஜ்காட்டிலுள்ள காந்தி ம்யூசியத்திற்கு அழைத்து விருது பெற்றதற்காக  பாராட்டுகள் செய்து காந்தி சமாதியைப் பார்வையிடச் செய்தார். அவருக்கு மனம் நிரம்பிய நன்றிகள்.

நேருக்கு நேர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாடல் நிகழ்த்திய நண்பர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு மிகுந்த நன்றி.

03.02.2019

••

0Shares
0