நேற்று வேலூரில் ஜே.எம். கூட்ஸி எழுதிய பீட்டர்ஸ்பெர்க் நாயகன் (The Master of Petersburg / J.M. Coetzee) நாவல் குறித்து உரையாற்றினேன். இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. சா. தேவதாஸ் இந்நாவலை மொழியாக்கம் செய்துள்ளார்.
வேலூரில் மாலை நான்குமணி முதலே மழையாக இருந்தது. மழைக்குள் நனைந்தபடியே பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த உரையைக் கேட்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அதிகம்.
நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த கனலி அமைப்பிற்கும். நண்பர் விக்னேஷ்வரனுக்கும், நிகழ்விற்குக் காரணமாக இருந்த நண்பர் வேலூர் லிங்கன், நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஸ்ருதி டிவிக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, ஆரணி சுதாகர், மொழிபெயர்ப்பாளர் ஆறுமுகம், எழுத்தாளர் கவிப்பித்தன் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
பீட்டர்ஸ்பெர்க்கில் தஸ்தாயெவ்ஸ்கி – எஸ்.ராமகிருஷ்ணன்
