டிசம்பர் 25


டிசம்பர் 25 புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு தேசாந்திரி பதிப்பகம்  சார்பில் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு இத்தாலிய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான இதாலோ கால்வினோ (Italo Calvino) குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன்


புனைவின் புதிய சாத்தியங்களைத் தனது எழுத்துகளின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் கால்வினோ.   இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

கால்வினோவின் புலப்படாத நகரங்கள்  நாவல் தமிழில் சா. தேவதாஸ் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது.

கால்வினோவின் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

இத்தாலிய நாட்டுப்புறக் கதைகளையும் கால்வினோ தொகுத்திருக்கிறார்.

நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

•••

.

0Shares
0