ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய ஜென் தேநீர் வாசித்தேன். ஓஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய பார்வைகளை முன்வைத்து புகழ்பெற்ற ஜென் கவிஞர்களையும் கவிதைகளையும் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே முக்கியமான கவிதைகளை மொழியாக்கமும் செய்திருக்கிறார். ஜென்னைப் புரிந்து கொள்வது குறித்தும் ஜென் கவிதைகளின் இயங்கும் தளம் மற்றும் அதன் வழியே அடையும் விழிப்புணர்வு குறித்தும் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பு மற்றும் புரிதலின் வழியே மட்டுமே இது சாத்தியம். ஒரு கட்டுரையில் ஜென் அனுபவத்தை இப்படி விளக்கியிருக்கிறார் …









