காலம் சொல்லும் பெயர்கள்
சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது. காலம் சொல்லும் பெயர்கள்
சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது. காலம் சொல்லும் பெயர்கள்
‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’. ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு …
இந்தியாவின் மிகப்பெரிய பதிப்பாளர் சாகித்ய அகாதமி. 24 மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாதமி மட்டுமே. அரசு நிதி உதவியுடன் செயல்படும் இந்தப் பதிப்பகம் மலிவு விலையில் மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டுவருகிறது சாகித்ய அகாதமி வெளியிடும் புத்தகங்களின் உள் அட்டையில் ஒரு சிற்பத்தின் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி நூலைக் கையில் எடுக்கும் போதும் இந்தச் சிற்பத்தை ரசித்துப் …
பெர்னாண்டோ ஸோரன்டினோ ஸ்பானிய எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மாயமும் விசித்திரமான நிகழ்வுகளும் கொண்டவை. அன்றாட வாழ்க்கையினை இத்தனை நுட்பமாக, குறிப்பாக அதன் அபத்த நிகழ்வுகளை துல்லியமாக யாரும் எழுதியதில்லை. அவர் கொசுவைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கொசுவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று தான் எவருக்கும் தோன்றும். வேறு எவராது இந்தக் கதையை எழுதியிருந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத இயலாது. ஆனால் ஸோரன்டினோ எத்தனை அழகாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை விவரிப்பவர் …
முனைவர் ப. சரவணன், மதுரை எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார். அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! …
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை தழுவி உருவாக்கபட்டுள்ளது. இதில் பகத் பாசில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மேக்பெத்தை விடவும் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய இரகள் படத்தினை தான் இப்படம் அதிகம் தழுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து திரைப்படங்கள் உலகின் வேறுவேறு மொழிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கபடுகின்றன. உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கட்டுள்ளது ஷேக்ஸ்பியருக்கு மட்டுமே. பைபிளுக்கு அடுத்து இதுவே அதிகமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாகக் கொண்டு 410 …
கன்னட எழுத்தாளர் எஸ். திவாகர் புகைப்படம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். மிகச்சிறிய கதை. ஒரு பழைய காலப் புகைப்படத்தைப் பற்றியது. பாணன் என்ற நண்பர் இந்தக் கதையினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியிருந்தார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. கல்யாணப் பெண்ணிற்கு நிகராக அவளது கணவன் அணிந்துள்ள நகைகள் மற்றும் சட்டை அணியாத அவரது தோற்றம் மாப்பிள்ளை முகபாவத்தில் கல்யாணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. எதையோ மறைக்கும் கண்கள். …
துயில் – ஒரு வாசிப்பனுபவம் பாஸ்கர் தேவதாஸ் நோய்மைப் பற்றியும் அதன் ரகசியங்களையும் துயில் நாவல் மூலம் எஸ்ரா அவர்கள் மிக உன்னத படைப்பாக இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார். ஒரு எளிய இலக்கியவாசகனாக இந்த நாவல் எனக்குள் உருவாக்கிய பாதிப்புகளை பதிந்திருக்கிறேன் மூன்று வழியாக தெக்கோடு என்ற கிராமத்து பயணமே இந்த நாவல், இது ஒரு TRIOLOGY SUBJECT போல் உள்ளது, KOKHER என்ற கிராமத்தை மையமாக வைத்து Abbas Kiarostami. மூன்று படங்களை இயக்கியிருப்பார். அது …
துணையெழுத்து குறித்த வாசிப்பனுபவம் கோபி சரபோஜி ———————————————– எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் …
‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது. இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது. நெடுநாள் திறக்கப்படாத …