குறுங்கதை 122 இரண்டு கோமாளிகள்.
இரண்டு சர்க்கஸ் நிறுவனங்களுக்குள் போட்டி இருந்தது. இதில் ஜாய் சர்க்கஸில் வேலை செய்த ரிங்கோ என்ற கோமாளியின் வேடிக்கைகளைக் காண்பதற்காக மக்கள் திரண்டு வந்தார்கள். ரோமன் சர்க்கஸில் வேலை செய்த கோமாளி தனாவிற்கு ரிங்கோவை விடத் தான் சிறந்தவன் எனக் காட்ட வேண்டும் என ஆசையிருந்தது. இதற்காக ஒவ்வொரு ஷோவிலும் புதிய வேடிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான். தன்னை விடத் திறமையற்றவனாக இருந்த போதும் எப்படி ரிங்கோ ஜெயிக்கிறான் எனத் தனாவிற்குப் புரியவேயில்லை. தன்னை ரிங்கோ சிரிக்க வைத்துவிட்டால் …